சுடச்சுட

  
  book2

  முல்லைப் பெரியாறு அணை: வரலாறும் தீர்வும் - இரா.வெங்கடசாமி; பக்.88; ரூ.45; தமிழோசை பதிப்பகம், கோவை-6; ) 9788459063.

  இன்று பற்றியெரியும் பிரச்னையாக உள்ளது முல்லை பெரியாறு அணை பிரச்னை. முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டதன் ஆரம்பகாலப் பின்னணியிலிருந்து தொடங்கும் இந்நூல், முல்லைப் பெரியாறு அணையின் அமைப்பு, அதன் வலிமை போன்றவற்றையும் விவரிக்கிறது. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டது என்று கேரள அரசு கூறுவது எந்த அளவுக்குச் சரி என்பதை நூல் ஆராய்கிறது. வலுவிழந்த முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கேரள அரசு முன்வைக்கும் வாதங்களைத் தனித்தனியாக ஆராய்ந்து கேரள அரசின் கூற்றில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் அடங்கியுள்ளன என்பதை நிறுவுகிறது. இடுக்கி அணையின் மூலம் நீர் மின்சாரத்தை தயாரிக்க கேரள அரசு முயல்வதையும், அதற்குத் தேவையான நீரைப் பெறவே முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று அது கூறுகிறது என்பதையும் நூல் அம்பலப்படுத்துகிறது. நூலின் இறுதிப் பகுதியில் முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு சாத்தியமான தீர்வுகளையும் முன் வைப்பது சிறப்பு. சமகாலப் பிரச்னையைப் பற்றி ஆராயும் சிறப்பான நூல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai