சுடச்சுட

  

  பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் -பாலகுமாரன்; பக்.136 ; ரூ.175; விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044- 2434 2899.

  உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தது முதல் திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தது வரையிலான பகவான் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கைச் சரித நூல் இது. தனது சிறு வயதில் ஒரு குருவி இறந்து போக, தான் காரணமாகிவிட்டதை எண்ணி அவர் வருந்துவது, கங்கை நதி மீது அவருக்கு இருந்த பக்தி, காசியில் தகனம் செய்யப்படும் உடலைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஞானத்தேடல், புத்தரின் நினைவாக தனது மகளுக்கு யசோதரா என்று பெயர் சூட்டியது, பகவான் ரமணரைச் சந்திப்பது, அரவிந்தரைச் சந்திப்பது, இப்படி ராம்சுரத்குமாரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள் அனைத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ராம்சுரத்குமார் பகவான் ரமணரை முதல் முதலில் சந்தித்த அனுபவம் மிகவும் உணர்ச்சிமயமாக உள்ளது.

  இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் இடையே ஊசலாடும் ராம்சுரத்குமாரின் உள்ளம் நம்மைப் பரிதாபப்பட வைக்கிறது. இந்நூல் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கைச் சரித்திரமாக இருந்தாலும், தொடக்கத்தில் முதல் 30 பக்கங்களுக்கு மேல் மனிதன் - கடவுள் - குரு இவர்களைப் பற்றி சுவையாகவும் விளக்கமாகவும் ஆசிரியர் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.

  யோகி ராம்சுரத்குமாரைப்பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இது ஓர் அருமையான தகவல் களஞ்சியம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai