நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல் - சாமுவேல் பி.ஹண்டிங்டன்; பக்.570; ரூ.540; அடையாளம், புத்தாநத்தம்; ) 04332 273444.
நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல் - சாமுவேல் பி.ஹண்டிங்டன்; பக்.570; ரூ.540; அடையாளம், புத்தாநத்தம்; ) 04332 273444.
 சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களை விளக்கும் நூல். ரஷியாவின் வீழ்ச்சிக்கு முன்பு உலகம் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளின் பின் அணி திரண்டது. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தனியுடமை, ஆளும் சக்திகளின் கருத்துகளுக்கும், பொதுஉடமை, உழைக்கும் மக்களின் கருத்துகளுக்கும் இடையிலேயே இருந்தன.
 சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரியான கருத்தியல் முகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத, இன, மொழி அடிப்படையிலான முகங்கள் முன்னுக்கு வந்துள்ளன. அவற்றின் மோதலாகவே பன்னாட்டு உறவுகள் அமைந்து உள்ளன என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
 கிழக்காசிய நாடுகளிலும், சீனாவிலும் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்துக்குப் போட்டியாக உள்ளது. இது உலக அளவில் பல்வேறு புதிய முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. இந்த முரண்பாடுகள் பல புதிய முறைகளில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
 வெளிப்படையான வர்க்க அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பல்வேறு கருத்தியல் சார்ந்த பிரச்னைகள் முன்னுக்கு வருகின்றன. கலாசார, நாகரிக அடிப்படையில் மக்கள் திரள்கிறார்கள் என்ற அடிப்படையில் சர்வதேச அளவில் பனிப்போருக்குப் பிறகு நிகழ்ந்து வருகின்றனவற்றைப் பற்றி நூலாசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார்.
 எனினும் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு உண்மையான, அடிப்படையான காரணம் எது என்பதை மக்கள் அறிவதும், உணர்வதும், அதன் அடிப்படையில் மக்கள் தங்களுடைய கருத்துகளை உருவாக்கிக் கொள்வதும், ஒன்று திரள்வதும் நிகழக் கூடியதே. இதைப் புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com