நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன் - உம்பர்ட்டோ ஈகோ கட்டுரைகள் - தமிழில்: க.பஞ்சாங்கம்; பக்.128; ரூ.125; அருட்செல்வர் ; ) 04259- 236030.
நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன் - உம்பர்ட்டோ ஈகோ கட்டுரைகள் - தமிழில்: க.பஞ்சாங்கம்; பக்.128; ரூ.125; அருட்செல்வர் ; ) 04259- 236030.
 உம்பர்ட்டோ ஈகோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஆசிரியப் பணி, ஊடகப் பணி, கட்டடக்
 கலைத் துறையில் பணி என பல பணிகளைச் செய்தவர். எனினும் குறியியலில் ஆர்வம் உள்ளவர். குறியியல் கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர். இலக்கியம் சார்ந்து அவர் எழுதிய நூலில் உள்ள ஏழு கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல்.
 "கணினியுகத்திலும் இலக்கியத்தின் தாக்கம் இருக்க முடியும். இலக்கியம் மனிதமனங்களை, மனிதர்களின் செயல்களை உருவாக்கும். இலக்கியம் நம் சொந்தக் கதைகளைத்தான் சொல்லுகின்றன. அதனாலேயே அவற்றை நாம் வாசிக்கிறோம். நேசிக்கிறோம். அதே நேரத்தில் இணையம் வழியிலான நவீனப் பனுவல்கள் நமக்குச் சுதந்திரமான படைப்பாற்றலைச் சொல்லித் தருகின்றன' என்கிறார் நூலாசிரியர்.
 "நாம் எல்லாருமே கணக்கில் அடங்காத பல்வேறு புனைவுகளில் நம்முடைய உணர்ச்சிகளை முதலீடு செய்த வண்ணமாகவே இருக்கிறோம். நாம் அத்தகைய கதை மாந்தரோடு மாந்தராக அரை மயக்கத்திலேயே வாழ்ந்து கொண்டிக்கிறோம்' என்றும் குறிப்பிடுகிறார்.
 இலக்கியத்தின் நடை பற்றிய விரிவான கருத்துகளும் அதனை அடியொற்றி " பொதுவுடமை அறிக்கையின் நடையைக் குறித்து' ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.
 நூலாசிரியர் எப்படி எழுதுகிறார்? அவரை எழுதத் தூண்டுபவை எவை? என்பது பற்றிய கட்டுரை, அரிஸ்டாடிலின் கவிதையியல் பற்றிய கட்டுரை, இத்தாலிய வரலாற்றறிஞர், மானுடவியலாளரான பியரோ கம்போரேசியின் கருத்துகளைப் பற்றி விவரிக்கும், ஆராயும் கட்டுரை என தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு புதிய வெளியை அறிமுகப்படுத்தும் சிறந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com