இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள் - தமிழில்: கோபால் மாரிமுத்து; பக்.520; ரூ.350; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17;  044- 2434 2926.
இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள் - தமிழில்: கோபால் மாரிமுத்து; பக்.520; ரூ.350; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17;  044- 2434 2926.
இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின்போது   தலைவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல்.  ஆலிவர் க்ராம்வெல், நெப்போலியன் போனபர்ட் ,    டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட 8 அயல்நாட்டவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் இடம் பெற்று உள்ளன. 
குறிப்பிட்ட கால வரலாற்று நிகழ்வையும் அதன் பின்னணியையும் தெரிந்து கொள்ள இந்நூலில் உள்ள சொற்பொழிவுகள் உதவுகின்றன.  தாதாபாய் நெüரோஜி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசியது, சுவாமி விவேகானந்தர் 1893 - இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஆற்றிய புகழ் பெற்ற சொற்பொழிவு,   தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு லாகூர் நீதிமன்றத்தில் பகத்சிங் பேசியது, வரைவுச் சட்டம் தயாரானபோது அரசியல் நிர்வாக அமைப்பில் அது பற்றி அம்பேத்கர்  ஆற்றிய சொற்பொழிவு, சுதந்திரம் பெற்ற அன்று நேரு ஆற்றிய உரை என  இதில்  இடம் பெற்றுள்ள சொற்பொழிவுகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 
பாரதியார் கவிதைகளுக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தபோது அதை எதிர்த்து சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி சட்டசபையில் ஆற்றிய உரை, திராவிடநாடு கோரிக்கையை வலியுறுத்தி 1962 - இல் அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியது  உள்ளிட்ட சொற்பொழிவுகளும் அடங்கும். 
சொற்பொழிவாற்றியவர் குறித்த விவரங்கள்,  சொற்பொழிவாற்றியபோது இருந்த சூழ்நிலை ஆகியவற்றை வாசகர்கள் தெரிந்து கொள்ளும்விதமான தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 
டொனால்ட் டிரம்ப்பின்  அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையுடன், தனிக்கட்டுரையாக அவருடைய  வாழ்க்கை வரலாறும் இடம் பெற்றிருக்கிறது.   வரலாறு, சமுதாயம், அரசியல் ஆகியவற்றில் ஆர்வமுடைய  அனைவருக்கும் பயன்படும்  நூல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com