சுடச்சுட

  
  nl4

  ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள் - சி.எஸ்.தேவநாதன்; பக்.120; ரூ.60; சுரா பதிப்பகம், சென்னை-40; ) 044- 2616 2173.
   ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல்.
   வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் கவரும் நிறைய வழிமுறைகளை இந்நூல் கற்றுக் கொடுக்கிறது.
   வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்காமல் சென்றால் அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கக் கூடும் என்பதையும் விளக்குகிறது.
   விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி அறிவிப்பு, விளம்பரம் என பல வழிகள் இருந்தாலும் தரம், நல்ல சேவை, தூய்மையைப் பேணுவது மிகவும் முக்கியம் என்றும், எப்போதும் கற்றுக் கொள்ளுதல், நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தல் வெற்றிகரமான விற்பனையாளராக ஒருவரை மாற்றும் எனவும் கூறும் சிறந்த வழிகாட்டி நூல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai