பறவையியல்

பறவையியல் - வ.கோகுலா, சி.காந்தி; பக்.200; ரூ.300; ஜாஸிம் பப்ளிகேஷன், 1, போஸ்ட் ஆபிஸ் தெரு, காஜாமலை, திருச்சிராப்பள்ளி-23.
பறவையியல்

பறவையியல் - வ.கோகுலா, சி.காந்தி; பக்.200; ரூ.300; ஜாஸிம் பப்ளிகேஷன், 1, போஸ்ட் ஆபிஸ் தெரு, காஜாமலை, திருச்சிராப்பள்ளி-23.
 நம் மனதைக் கவரும் பறவைகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான பல உண்மைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்நூல். நூலின் முதற்பகுதியில் இந்த உலகம் தோன்றிய முறை, உயிரினங்கள் தோன்றியது, கண்டங்கள் இடம் பெயர்ந்தது, பறவையினங்களின் தோற்றம் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன.
 அரிஸ்டாட்டில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளை தனது "விலங்குகளின் வரலாறு' நூலில் சேர்த்ததை பறவையியல் ஆய்வின் தொடக்கமாக கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் நடந்த ஆய்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
 பறவைகளின் இறகுகள் எம்மாதிரி அமைந்துள்ளன? அவற்றின் உடலில் காற்றுப் பைகள் எங்கெல்லாம் உள்ளன? பறவைகள் எவற்றையெல்லாம் உண்ணுகின்றன? கூடுகளை எவ்வாறு கட்டுகின்றன? இனப்பெருக்கம் செய்வது, முட்டையிடுவது, அடைகாப்பது எல்லாம் எவ்வாறு நிகழ்கின்றன? என பறவைகளைப் பற்றிய பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
 சுமார் ஐம்பது லட்சம் பறவைகள் ஐரோப்பா, ஆசிய நாடுகளிலிருந்து ஆப்ரிக்காவுக்கு இடம் பெயர்கின்றன; இடம் பெயர்வதற்கான வழி அறியும் திறன்கள் அவற்றுக்கு இருக்கின்றன எனக் கூறும் இந்நூல், பறவைகளை ஒருவர் எவ்வாறு பார்க்க வேண்டும்? என்பதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகளையும் கூறுகிறது. பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா? என வியக்க வைக்கும் நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com