சுடச்சுட

  
  book1

  கல்வி ஏற்பாட்டில் மொழி - பி.இரத்தினசபாபதி; பக்.280; ரூ.180; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14;   044- 2811 5618.
  "மொழியும் சமுதாயமும்', "வகுப்பறையில் மொழிப் பன்முகம்', "வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம்', "கல்வி ஏற்பாட்டில் மொழி', "மொழிசார்ந்த எதிர்கோள்கள்' ஆகிய தலைப்புகளில்  கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல்.  தமிழ்நாடு ஆசிரியர் 
  கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  
  சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. எந்தப் பாடத்தையும் புரிந்து கொண்டு சிறப்பாகப் பயில மொழியை நன்கு கற்றிருப்பது அவசியம் என்பன போன்ற பல கருத்துகளை மிகவும் விரிவாக இந்நூல் விளக்குகிறது. மாணவர்
  களுக்கு கல்வி கற்பிப்பதற்கான பல செய்முறை வழிகாட்டல்களும் நிரம்பியிருக்கின்றன.  ஆசிரியர் பயிற்சி கல்வி பயிலும் அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai