சுடச்சுட

  
  book4

  செகண்ட் ஒப்பினியன் - டாக்டர் கு.கணேசன்; பக்.304; ரூ.200; சூரியன் பதிப்பகம்,  சென்னை -4;   044-4220 9191. 
  மருத்துவம் சார்ந்த நூல்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நூலாக இது விளங்கு
  கிறது. 
  கண்ணுக்குப் புலப்படாத உள்ளுறுப்புகள் எப்படி உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத வலிமையுடன் விளங்குகின்றன என்பதை ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
  இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன சிகிச்சைகள் வரை அலசப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு.
  அதுமட்டுமன்றி, உடலில்  ஏற்படும் பல்வேறு நோய்கள், அதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் என அனைத்து விஷயங்களும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. ஓர் உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள் உடலின் பிற உறுப்புகளில் எவ்வாறு எதிரொலிக்கின்றன? அவற்றை எத்தகைய அறிகுறிகளின் வாயிலாகக் கண்டறியலாம்? என்பன போன்ற தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
  இதயம், வயிறு, கல்லீரல், சிறுநீரகம், குடல் என உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை பக்கத்துக்குப் பக்கம் பட்டியலிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.
  மருத்துவம் தொடர்பான மேலும் ஒரு நூலாக அல்லாமல், வாசகர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் முக்கிய நூலாக இது அமைந்துள்ளது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai