நீ நதி போல ஓடிக் கொண்டிரு

நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர்; பக்.120; ரூ.100; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044- 2436 4243.
நீ நதி போல ஓடிக் கொண்டிரு

நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர்; பக்.120; ரூ.100; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044- 2436 4243.

பெண்களின் பிரச்னைகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். தீர்வுகள் சொல்லலாம். ஆனால் ஒரு பெண் தன் பிரச்னைகளுக்கான தீர்வுகளைச் சொல்வதைப் போல ஓர் ஆணால் சொல்ல முடியாது என்பதற்கு இந்நூலே ஓர் எடுத்துக்காட்டு.

பெண்களை வீட்டில் யாரும் பாராட்டுவதில்லை. தேவையற்ற பழிச்சொற்களுக்குப் பெண்கள் ஆளாக நேரிடுகிறது. பேருந்துகளில், பொது இடங்களில் பெண்கள் ஆண்களால் சீண்டப்படுகிறார்கள். பெண்கள் தனியாக தொலைதூரங்களுக்கு ஆண்களைப் போல பயணம் செய்ய முடியாது. பெண்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், வேலைக்குப் போனாலும், சமையலறையிலிருந்து அவர்களால் விடுபட முடியாது. வாழ்நாள் முழுவதும் ஏதேனும் பயத்துடன் பெண்கள் வாழ வேண்டியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியல் சூழ்ந்த உலகில் பெண்கள் தங்களை மீட்டுக் கொண்டு தனிச்சிறப்பு பெறுவது எப்படி? என்பதற்கு தெளிவாக விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் அடங்கிய நூல்.

"வீடு பாராட்டாவிட்டாலும் நேசிக்கிறது. ஓர் ஆபத்து என்றால் பதறுகிறது. இதுவே சுகம்' என்று பெண்களைப் பாராட்டாத வீட்டின் இன்னொரு பக்கத்தையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்? என்பதை பெண்களின் கண்ணோட்டத்தில் விளக்கும் கட்டுரைகளும் உள்ளன. சமையல் வேலை உட்பட குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், எல்லா வேலைகளையும் எல்லாக் குழந்தைகளும் செய்யும்படி கற்றுத் தர வேண்டும் என்கிறார்.

"காலம் காலமாக போராட்டமே பெண்ணின் வாழ்வியல்பாக உள்ளது. அவளின் தார்மீகக் கோபமும், தீராத மன உறுதியும் இந்த உலகில் மூடப்பட்ட நீதியின் கதவுகளைத் தட்டியவாறே இருக்கின்றன'. அது தொடரும் என்பதை மிக சிறப்பாக இந்நூல் விளக்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com