இங்கே நிறுத்தக் கூடாது

இங்கே நிறுத்தக் கூடாது - அ.முத்துலிங்கம்; பக்.128; ரூ.150; நற்றிணை ப திப்பகம், சென்னை-77;   044- 7906 7607.
இங்கே நிறுத்தக் கூடாது

இங்கே நிறுத்தக் கூடாது - அ.முத்துலிங்கம்; பக்.128; ரூ.150; நற்றிணை ப திப்பகம், சென்னை-77; 044- 7906 7607.
நூலாசிரியரின் 12 சிறுகதைகளும் இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு.
மனைவியின் "பெண்ட்லி' காரை இரவல் வாங்கி பயணிக்கிறார் பரமேஸ்வரன். பூச்சு வேலை செய்யும் மூசாவை உடன் அழைத்துச் செல்கிறார். அவன் அகதி. இனிமேல் இழப்பதற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை. பலவிதமான துயரங்கள் நாலா பக்கமும் அழுத்தியபோதும் அவன் நிம்மதியாகத் தூங்கிவிடுகிறான். தன்னை மறந்து ஒரு குழந்தை போல உறங்கும் அவனைக் கண்டு வியந்து நிற்கிறார் பரமேஸ்வரன். இதுதான் நூலின் தலைப்பைக் கொண்டுள்ள சிறுகதையின் கதை.
மூன்று தங்கைகள் திருமணமாகிச் சென்று விட வயதான தந்தையுடன் வசிக்கிறாள் "செர்மி மரம்' சிறுகதையின் நாயகி. வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறுகதை.
சாக்கிலே சுற்றி வீதியிலே வீசப்பட்ட கவனிப்பாரின்றிக் கிடந்த சிசுவை எடுத்து வளர்க்கும் தம்பதி "எகேலுவின் கதை'யின் பிரதான பாத்திரங்கள். இந்த உலகத்தில் ஆகப் பெரியது அன்புதான் என்கிறான் எகேலு.
சத்தியமான வார்த்தை.
எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மகள் தைலா ராமானுஜம் எழுதிய "மாவோவுக்காக ஆடை களைவது' சிறுகதை மொழிபெயர்ப்புச் சிறுகதையாக நூலில் இடம் பெற்றுள்ளது. உளவியல்ரீதியிலான படைப்பு.
"என்னைத் திருப்பி எடு', "வேதாகமத்தின் முதல் பாவம்' , "குமர்ப்பிள்ளை' சிறுகதைகளும் வித்தியாசமான கதைக் கருவுடன் அமைந்துள்ளன. சில சம்பவங்கள் , சில குறிப்புகள், சில அனுபவங்கள், சில நினைவுகள் இவற்றிலிருந்துதான் சிறுகதைகள் உருவாகின்றன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளும் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com