சமூகம் என்பது தீவுகள் அல்ல

சமூகம் என்பது தீவுகள் அல்ல - ஜி.மணிலால்;   பக்.160; ரூ.200; வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, சோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88.
சமூகம் என்பது தீவுகள் அல்ல

சமூகம் என்பது தீவுகள் அல்ல - ஜி.மணிலால்; பக்.160; ரூ.200; வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, சோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88.

"இன்றைய மனித வள மேம்பாட்டிற்கு அடிநாதமாய் இருப்பது ஆதிமனிதனின் அறிவார்ந்த ஆற்றலே'. "உன்னை நீ நேசி. பிறகு பிறரை நேசிப்பது எளிதாகிவிடும்'. "எதையும் நம்புவதற்கு எதையும் நம்பாமல் இருப்பதும் ஒரே வழி'. "வாழ்க்கை என்பது சமூகநலன் கருதி மேற்கொள்ளப்படும் தியாகமே'. "வாழ்க்கைக்கு ஆதாரம் குடும்பம். வீடு செழித்தால் நாடு செழிக்கும்'. "வாழ்க்கையில் பிறரை வஞ்சித்து, ஏமாற்றி அதன் மூலம் உயர்ந்த நிலைக்கு வருவது என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் செயல்முறையாகும். திறமையோடு அறிவு, ஆற்றல், புத்திக் கூர்மை போன்றவற்றை வைத்து சந்தர்ப்பம் வரும்போது சரியான உயர்வுக்கு முயற்சிக்க வேண்டும்'. "சமுதாயம் ஒரு தேரானால் அதை ஊர் கூடி இழுப்பதுதானே முறை? என்னதான் ஆட்டோமேட்டிக் கார் வசதி இருந்தாலும் அதை இயக்காமல் அது இயங்காதே!' - இவையெல்லாம் இந்நூலில் காணப்படும் எளிய ஆழமான கருத்துகளுக்கான சில எடுத்துக்காட்டுகளே!

மனிதர்கள் சமூகத்தோடு இயைந்து எவ்வாறு வாழ்வது என்பதை விளக்கும் 28 கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில், மிக மிக ஆழமான கருத்துகள் மிக மிக எளிமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. நூலாசிரியரின் அறிவுப்பூர்வமான கருத்துகள் அனுபவம் சார்ந்தமுறையில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது அற்புதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com