சுடச்சுட

  
  nl1

  தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு (இரு தொகுதிகள்) முதல் தொகுதி- பக்.416; ரூ.300; தொகுதி-2: பக்.376; ரூ.300; தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-106.
   சென்னை அரும்பாக்கம் வைணவக் கல்லூரி தமிழ்த்துறையும் "தினமணி' நாளிதழும் இணைந்து "தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு' எனும் பொருண்மையில் நடத்திய தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட 110 கட்டுரைகளின் தொகுப்பு. ஐம்பெருங்காப்பியங்களும், ஐஞ்சிறுங்காப்பியங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
   சிலப்பதிகாரம் கூறும் மன்னனின் தன்னலமற்ற தீர்ப்பு, இசை மருத்துவம், வாழ்வியல் நெறிகள், வாழ்வியல் சிந்தனைகள், நம்பிக்கைகள், கடவுள் வழிபாடு, மனையற வாழ்வியல் மாட்சி ஆகியவற்றை பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
   மணிமேகலையில் சமூகச் சிந்தனைகள், பெண்மையக் கருத்தமைவுகள், வாழ்வியல் அறம், கதைகள், பசிப்பிணி, நிலையாமையும் அறமும், நால்வகை விடை, அறவுரைகள் கூறப்பட்டுள்ளன.
   உதயணகுமார காவியத்தில் அகப்பொருள் மரபுகள்; சூளாமணியில் அரசியல் விழுமியங்கள்; வளையாபதியில் செம்மையான வாழ்க்கை, இளமை நிலையாமை; சீவகசிந்தாமணியில் வாழ்வியல் நோக்கு, சமணர்களின் இல்லறவாழ்வு; பெருங்கதையில் அறம் போற்றும் மரபு, பாத்திரப் படைப்பு; யசோதர காவியத்தின் கட்டமைப்பு என மற்ற காப்பியங்களிலிருந்து ஓரிரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
   காப்பியங்களில் கடிதச் செய்திகள், காப்பியங்களில் சுற்றுலாப் பயணங்கள், கலையின் ஒருங்கியல்பு, காப்பியங்களில் மறுமணங்களும் இன்றைய வாழ்வியலும், காப்பியங்களில் காணலாகும் "மீஇயல்பு' கனவுப் பதிவுகள் ஆகியவை பொதுவானவை மட்டுமல்ல, குறிப்பிடும்படியாகவும் உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai