உழைப்பவனுக்கும் உற்சாகம்

உழைப்பவனுக்கும் உற்சாகம் - ஜான் ரஸ்கின்; தமிழில்:  செல்லூர் கண்ணன்; பக்.176; ரூ.120 ; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-120; 044-26507131.
உழைப்பவனுக்கும் உற்சாகம்

உழைப்பவனுக்கும் உற்சாகம் - ஜான் ரஸ்கின்; தமிழில்:  செல்லூர் கண்ணன்; பக்.176; ரூ.120 ; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-120; 044-26507131.
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது,  ஜான் ரஸ்கின் எழுதிய மசபஞ பஏஐந கஅநப என்ற நூலைப் படித்தார். அது அவருடைய சிந்தனைமுறையையே மாற்றிவிட்டது. அந்த நூலின் தமிழாக்கம் தான் இந்நூல். 
விவசாயப் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இயந்திரத் தொழில் வளர்ந்த காலத்தில் உழைப்பவர்களின் வாழ்நிலையை ஆழமாக ஆய்வு செய்து இந்நூலை ரஸ்கின் எழுதியிருக்கிறார்.  இயந்திரத் தொழில் வளர்ச்சியில் மனிதர்களின் அக, புற வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் அது  எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் நூல் ஆராய்கிறது. 
மனிதர்களுக்கு உணவு தரும் விவசாயப் பொருளாதாரத்தின் இன்றியமையாமை,  ஆன்மிக வாழ்வின் அவசியம்,  லாபநோக்கில்லாத பொருளாதாரச் செயல்பாடுகள் ஆகியவற்றை ஜான்ரஸ்கின் வலியுறுத்துகிறார்.  
கைத்தொழில்களின் வளர்ச்சியில் காந்தி கொண்டிருந்த  அக்கறை, ஆன்மிக நோக்குடன் எல்லா விஷயங்களையும் அவர் பார்த்தது,  அகிம்சை வழி  ஆகிய எல்லாவற்றுக்கும் இந்நூல் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நுகர்வுக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இந்நாளில் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் உள்ள பல கருத்துகள் இப்போதும் ஏற்புடையதாயிருப்பது வியப்பளிக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com