சுடச்சுட

  
  nool4

  "அப்படியா' (ஆன்மிகக் கேள்வி-பதில்) - ஈச நேசன் மகஸ்ரீ; பக்.96; ரூ.75; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. ) 044-25361039.
   ஓர் ஆன்மிக மாத இதழில் மாதம்தோறும் வெளியான கேள்வி - பதில்கள் (200) இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
   சிவன் கோயிலில் சண்டீஸ்வரர் சந்நிதியில் கை தட்டுவது ஏன்? எலும்பிச்சை விளக்கு ஏற்றுவதன் ஐதீகம் என்ன? தெய்வத்தை தினமும் பூஜை செய்தாலும் சோதனை ஏற்படுவது ஏன்? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா? பூஜைக்குரிய பாத்திரங்களை எந்தெந்த நாள்களில் துலக்க வேண்டும்? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? பெண்கள் பூசணிக்காய் உடைப்பது, வெட்டுவது கூடாது என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன? தெரியாமல் செய்த பாவத்தை எப்படிப் போக்கிக் கொள்வது உள்ளிட்ட 200 கேள்விகளுக்கான பதில்கள் இந்நூலில் உள்ளன. என்றாலும், சில கேள்விகளுக்கான பதில்கள் காரண- காரியங்களுடன் தகுந்த விளக்கம் கூறி விளக்கப்பட்டிருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai