கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு

கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு-சுசிலா நய்யார்; தமிழில்-பாவண்ணன்; ரூ.160; பக். 160; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ) 044- 2489 6979.
கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு

கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு-சுசிலா நய்யார்; தமிழில்-பாவண்ணன்; ரூ.160; பக். 160; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ) 044- 2489 6979.
 தேசப்பிதா காந்தியடிகளைப் பற்றி அறிந்த அளவுக்கு அவரது வெற்றிக்குபின்புலமாக இருந்த கஸ்தூர்பா குறித்து நாம் அறிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கஸ்தூர்பா குறித்த மிக அரிய உருக்கமான பல தகவல்களை வெளிப்படுத்தும் நூலாக இதுஅமைந்துள்ளது.
 மிகப்பெரியதலைவரின் மனைவியாகவும், நண்பராகவும், குழந்தைகளுக்கு நல்ல மாதாவாகவும் அவர் பல்வேறு அவதாரம் எடுத்திருப்பதை விவரித்திருக்கிறார் நூலாசிரியர் சுசிலா நய்யார். கஸ்தூர்பாவுடன் ஆசிரமத்தில் சிறுவயது முதலே தங்கிய நூலாசிரியர், கஸ்தூர்பாவின் தாய்மை உணர்வை ஒரு வீட்டுச் சூழலிருந்து விளக்குவது வியக்க வைக்கிறது. மிகப்பெரிய தலைவரின் மனைவியாக இருந்தாலும், ஆசிரமத்தில் மற்ற பெண்களை விட அதிகமான வேலைகளைச் செய்து, சுறுசுறுப்பானவராக அவர் இருந்திருப்பதைப் படிக்கும் போது காந்தியடிகளின் தியாகத்துக்கு சற்றும் குறையாத தியாகத் திருவிளக்காகவே கஸ்தூர்பா விளங்கியிருப்பது தெரிகிறது.
 கஸ்தூர்பா இறகுப்பந்து, கேரம், பிங்பாங் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்துள்ளதையும், அதிலும் நோய்வாய்ப்பட்ட நேரத்தில் கூட கேரம் விளையாட்டை அவர் எந்த அளவுக்குநேசித்தார் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. கஸ்தூர்பாவின் சமையல், அவரது மருத்துவ முறை என அவரது ஒவ்வொருசெயல்பாட்டையும் படிப்போர் சலிப்படையாத வகையில் அழகிய நாவல் போலதொகுத்தளித்திருக்கும் நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கஸ்தூர்பாவின் கடைசிக்காலத்தில் கணவர், மகன், உறவுகள், உதவியாளர்கள் என அனைவரும் எந்தெந்தவகையில் நடந்துகொண்டார்கள் என்பதை வாசிக்கும்போது இதயம் கனக்கிறது. மூலநூலின் கருத்துச்சிதையாமல் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com