வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் - வாழ்வியல் கட்டுரை- வித்யா சாகர்; பக்.144; ரூ.125; முகில் பதிப்பகம், 11, சூர்யா தோட்டம், குதிரைக் குத்தித் தாழை, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51.
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் - வாழ்வியல் கட்டுரை- வித்யா சாகர்; பக்.144; ரூ.125; முகில் பதிப்பகம், 11, சூர்யா தோட்டம், குதிரைக் குத்தித் தாழை, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51.
 "நிம்மதி: கிலோ நாலு ரூபாய்', " உடம்பு ஓர் ஆயுதம்: ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப் போர் புரிவோம்', "வசவு: வசவு வாங்கலையோ வசவு', "எல்லோரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள்' - இவ்வாறு வித்தியாசமான பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
 இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நம்மை நாம் எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றஅடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் அனுபவம் சார்ந்த கருத்துகள் தோல்வி, சோர்வு, தற்கொலை எண்ணம் போன்றவை நம்மை அணுகாவண்ணம் காத்துக் கொள்ள உதவும் வகையில் இருக்கின்றன.
 "தேவைக்கேற்ப மட்டுமே கோபத்தைப் பயன்படுத்துவோம். கோபம் நம்மைச் செதுக்கட்டும். கண்டிப்பாக யாரையும் வெட்டலாகாது' என கோபப்படுவதைப் பற்றியும், "முதலில் செய்ய வேண்டிய எதையும் செய்ய முடியுமென்று நம்புங்கள். மனத்தால் சோர்ந்துவிடும் முன் முயன்று ஓர் அடியையேனும் முன்னெடுத்து வையுங்கள்' என்று சோர்வில்லாமல் இருப்பதைப் பற்றியும், "எனக்குத் தெரிந்து, உடம்பைப் பேணுவது என்பது வாயை மூடுதலில் ஆரம்பிப்பதாகவே எண்ணுகிறேன். தேவையற்றதைப் பற்றி பேசாமை எனும் பக்குவமும், தேவையுள்ளதைத் தக்க இடத்தில் பேசும் அறிவுக்கூர்மையும், உடலுக்கு ஏற்றதை மட்டும் உண்பதிலும், உடல் ஏற்காததைத் தவிர்த்தலிலுமே உடம்பைப் பேணுதலுக்கான வழி தொடங்குகிறது. அது வாயின் மூலமாகவே சாத்தியமாகும்' என்று வாயைக் கட்டுப்படுத்துவதைப் பற்றியும் நூலாசிரியர் விளக்குவது உட்பட நூலில் கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் அனுபவம் சார்ந்தவையாகவே வெளிப்பட்டிருக்கின்றன.
 " தானென்னும் செருக்கு, தனக்கென்று என்னும் சுயநலம், தனக்கான ஏக்கம், தனக்கான வலி, தான் என்னும் இடத்திலுள்ள அத்தனையையும் கொன்று விடுங்கள்' என்று தற்கொலைக்கு புதுவிளக்கம் கொடுத்திருப்பதும் அருமை.
 வாழ்க்கையில் அவநம்பிக்கை, சோர்வு, முயற்சியின்மை, மன அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com