காலனிய வளர்ச்சிக் காலம்

காலனிய வளர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை- எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ரகு அந்தோனி; பக்.188; ரூ.175; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; 044- 2625 1968.
காலனிய வளர்ச்சிக் காலம்

காலனிய வளர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை- எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ரகு அந்தோனி; பக்.188; ரூ.175; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; 044- 2625 1968.
 இயற்கைச் சீற்றம், போர்கள், வாழ வழியில்லாமற் போதல், அரசின் நடவடிக்கைகள் என மனிதர்கள் புலம்பெயர நிறையக் காரணங்கள் இருக்கின்றன.
 பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து மொரீசியசுக்கு இடம் பெயர்ந்த மக்களைப் பற்றியும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளுக்கு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய அனுப்பப்பட்ட தமிழ் ஒப்பந்த குடியேற்றத் தொழிலாளர்களைப் பற்றியும், 1829 -1891 காலகட்டத்தில் சென்னையிலிருந்து மொரீசியசுக்குச் சென்ற கூலித் தொழிலாளர்கள் பற்றியும், சிலோன் காப்பித் தோட்டங்களில் வேலை செய்யச் சென்ற மக்களைப் பற்றியும், மலேயாவில் வாழ்ந்த தமிழ் வணிகர்கள், நாடுகடத்தப்பட்டவர்களின் சமூக வாழ்க்கையைப் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
 புலம்பெயர்ந்த மக்களின் அன்றாடப் பழக்க வழக்கங்கள், உயிர் பிழைப்பதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் என நூல் தரும் தகவல்கள் கண்ணீரை வரவழைக்கின்றன.
 மொரீசியஸில் ஓர் அடிமையின் தலைமுடியை வெட்டும்போது வெட்டுபவரின் கை மீசையைத் தொடுவது அவமானமாகக் கருதப்பட்டது, பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் இருந்து ஒரு சில தமிழ்ப் பெண்கள் மோசமான, துன்பமான திருமண உறவுகளில் இருந்து தப்பிக்க ரீயூனியன் பகுதிக்குச் சென்றது, மெட்ராசிலிருந்து மொரீசியஸுக்கு அனுப்பப்பட்ட பெண் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஐரோப்பிய மருத்துவரும், குடியேற்ற அதிகாரிகளும் மருத்துவப் பரிசோதனை செய்வதை அவர்களுடைய கணவன்மார்கள் கடுமையாக எதிர்த்தது உள்ளிட்ட பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com