கூடல் நூல்களில் ஆடல்

கூடல் நூல்களில் ஆடல் - ஆ.எஸ்தர் பிரதீபா; பக்.172; ரூ.175; ஆ.எஸ்தர் பிரதீபா, 21, வி.கே.ஏ.நகர், அம்மாபேட்டை, உசுப்பூர், சிதம்பரம்-608401.
கூடல் நூல்களில் ஆடல்

கூடல் நூல்களில் ஆடல் - ஆ.எஸ்தர் பிரதீபா; பக்.172; ரூ.175; ஆ.எஸ்தர் பிரதீபா, 21, வி.கே.ஏ.நகர், அம்மாபேட்டை, உசுப்பூர், சிதம்பரம்-608401.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் நூலாசிரியரின் சங்க இலக்கியம் சார்ந்த நூலறிவு நம்மை வியக்க வைக்கிறது.
 கி.மு.300 - கி.பி.300 வரையிலான காலத்தில் நான்மாடக் கூடல் நகரில் கடைச்சங்கம் செயல்பட்டு வந்தது. அக்காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநூனூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவற்றில் காணப்படும் இசை, நாட்டியம், கூத்து குறித்த செய்திகளைப் பற்றி விளக்கி எழுதப்பட்ட 21 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
 குறிஞ்சிப் பண், சாதாரிப் பண், பஞ்சுரப் பண், விளரிப் பண் உள்ளிட்ட பண் வகைகள் பற்றியும், யாழ், பறை, குழல், முரசு உள்ளிட்ட இசைக் கருவிகள் பற்றியும், துணங்கைக் கூத்து, குரவைக் கூத்து, வள்ளிக்கூத்து, அல்லியம் கூத்து உள்ளிட்ட கூத்துகள் பற்றியும், கூத்து நடத்தும் கூத்தர்கள் பற்றியும், நடனம் ஆடும் விறலியர் பற்றியும், பாடல் வகைகள் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள், கடைச்சங்க காலத்தின் இசை, நாட்டிய உலகத்தை மட்டுமல்ல சங்ககால மக்களின் வாழ்க்கையையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com