உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள் - ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள் - சுதா மேனன், வி.ஆர்.ஃபெரோஸ்; தமிழில்: கோபாலஸ்வாமி ரமேஷ்; பக்.264; ரூ.180; புளூ ஓசியன் புக்ஸ், 72
உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள் - ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள் - சுதா மேனன், வி.ஆர்.ஃபெரோஸ்; தமிழில்: கோபாலஸ்வாமி ரமேஷ்; பக்.264; ரூ.180; புளூ ஓசியன் புக்ஸ், 72, டீச்சர்ஸ் காலனி, அடையாறு, சென்னை-20.
உடலில் எவ்வளவு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டாலும் மனதில் உறுதி இருந்தால், சாதனைகள் பல புரிந்து வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள 15 சாதனை மனிதர்களைப்பற்றிய நூல் இது. 
20 சதவீதமே இயங்கக் கூடிய நுரையீரலுடன் மூச்சுவிட முடியாமல் தவித்த ஆயிஷா செüத்ரி சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாறுகிறார். MY LITTLE EPHIPHANIES என்ற நூலை எழுதுகிறார். 
கண் பார்வையை திடீரென இழந்த அங்கித் ஜிந்தால் பூதக் கண்ணாடியின் உதவியுடன் புத்தகங்களைப் படிக்கிறார். கல்லூரி படிப்பை முடித்து விப்ரோ நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிறகு டெல் சர்வதேச சேவை மையத்தில் பணியில் சேர்கிறார். 2015 இல் ஐக்கிய நாடுகள் சபையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று உரையாற்றுகிறார். 
ஒரு விபத்தில் தண்டுவடம், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நகரவே முடியாத நிலை சுனில் தேசாய்க்கு ஏற்படுகிறது. எனினும் குளிர்சாதனப் பெட்டி பழுது நீக்கும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். 
இளம் வயதில் போலியோ தாக்கி நடக்க முடியாமல் போன எஸ்எச். அத்வானி, தற்போது மும்பையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர். பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளைப் பெறுகிறார்.
சாதனை படைத்த மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லி தன்னம்பிக்கையூட்டும் நூல் இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com