பரிசுக் கதைகள் பதினெட்டு

பரிசுக் கதைகள் பதினெட்டு - சோ.சுப்புராஜ்; பக்.230; ரூ.150; சக்தி வேலம்மாள் பதிப்பகம், 7, இரண்டாவது பிரதான சாலை, நேதாஜி நகர், திருமுல்லைவாயில், சென்னை-62.
பரிசுக் கதைகள் பதினெட்டு

பரிசுக் கதைகள் பதினெட்டு - சோ.சுப்புராஜ்; பக்.230; ரூ.150; சக்தி வேலம்மாள் பதிப்பகம், 7, இரண்டாவது பிரதான சாலை, நேதாஜி நகர், திருமுல்லைவாயில், சென்னை-62.
வார,மாத இதழ்களும், இணைய இதழ்களும், தமிழ் அமைப்புகளும் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 18 சிறுகதைகளின் தொகுப்பு. எண்பதுகளின் மத்தியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. 
குடிக்க ஒரு வாய் கூட தண்ணீர் கூட தர யோசிக்கும் வறண்ட கிணறுகளைக் கொண்டது அந்த கிராமம். வயதான கணவர் தொலைதூரம் சைக்கிளில் சென்று கொண்டு வந்த தண்ணீரை, பஞ்சம் பிழைக்க வந்த கிணறு வெட்டும் சங்கையாவின் எட்டுப் பேர் கொண்ட குடும்பத்துக்கு தாகம் தீர தந்து உபசரிக்கிறாள் முதியவள். மனதில் ஈரம் கொண்ட அவளுக்கு பிரதிபலனாக அங்குள்ள கிணற்றில் காசு வாங்காது தூர் எடுக்க இறங்கிவிடுகிறது சங்கையாவின் குடும்பம். தினமணி கதிரில் வெளியான இச்சிறுகதை தொகுப்பில் அதிக கவனத்தைப் பெறுகிறது. 
பிளஸ் டூ படிக்கிறான் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த ஜோசப். குறைவான மதிப்பெண் பெற்ற அவனை வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வைக்க கடலுக்கு மீன் பிடிக்க அழைத்துச் செல்கிறார் தந்தை. இரண்டு நாள் ராப்பகலாய் பாடுபட்டதற்கு தந்தைக்குக் கிடைத்த சொற்பத் தொகை ஜோசப்பை சிந்திக்க வைக்கிறது. "ஒரு டிகிரி வாங்கிட்டு தேவைப்பட்டா அப்பா கூடப் போய் மீன் பிடிக்கிறேன்' என்று சொல்லி பள்ளிக்கு அடுத்த நாள் கிளம்பி விடுகிறான். வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்துகிறது "ஜோசப் கடலுக்குப் போகிறான்' என்ற சிறுகதை. 
தொகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சிறுகதைகளும் பரிசு பெற்றவை என்பதால், ஒவ்வொன்றும் போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களுக்குத் திகட்டாத படைப்புகளாய் திகழ்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com