ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு)

ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு) - நெல்லை சு.முத்து; பக்.240; ரூ.220; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு)

ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு) - நெல்லை சு.முத்து; பக்.240; ரூ.220; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
 ஹைக்கூ பற்றித் தெரிந்து கொள்ள பயன்படும் நூல். நூலாசிரியர் புகழ்பெற்ற அறிவியலாளர். ஹைக்கூ பற்றிய நூலிலும் அவருடைய அறிவியல்சார்ந்த அணுகுமுறை வெளிப்படுகிறது. விவரங்களைப் பரிசீலனை செய்து முடிவுக்கு வருதல் அறிவியல் அணுகுமுறை. ஹைக்கூ பற்றிய இந்நூலிலும் ஹைக்கூ சார்ந்த பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
 சுமார் 274 ஹைக்கூ கவிஞர்கள் உள்ளனர்; 26 ஹைக்கூ இதழ்கள் உள்ளன; ஹைக்கூ எழுதுபவர்களைக் காட்டிலும் ஹைக்கூ பற்றி எழுதுபவர்களே விகிதாச்சார அடிப்படையில் உயர்ந்துவிட்டனர் என்பன போன்ற விவரங்கள், தமிழில் பாரதியின் பாடல்களில் காணப்படும் ஹைக்கூ கவிதை முதல் சமகால ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் வரை பல்வேறு கோணங்களில் நூலாசிரியர் ஹைக்கூ சார்ந்த தகவல்களை அளித்துள்ளார்.
 ஹைக்கூ என்று குறிப்பிடப்பட்டாலும், அது ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன், ஹைக்கா, லிமர் சென்ரியு, லிபுன் எனப் பலவடிவங்களில், வகைகளில் வெளிப்படுவதை விவரித்துள்ளார்.
 ஹைக்கூ தமிழில் எவ்விதங்களில் எல்லாம் எழுதப்படுகின்றன? என்பதையும் நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். ஹைக்கூவில் கூறப்படும் கருத்துகளைப் பற்றி நூலாசிரியர் முதலில் தனது கருத்தைப் பதிவு செய்வது சிறப்பு. உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். "விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு பசுவுக்கு ஆகும் செலவு அமெரிக்காவில் ரூ.125(2.7 டாலர்), இங்கிலாந்தில் ரூ.350(8 டாலர்) என்கிற நிலை. கரும்பு விவசாயிகளுக்கும் அமெரிக்காவில் ஆண்டுக்கு 390 கோடி டாலர். ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுக்கு 640 கோடி டாலர்கள். இந்திய நிலை சொல்வதற்கில்லை. அவ்வாறே வளர்ந்த நாடுகளுக்கு இறக்குமதி வரி 3 சதவீதம் தாண்டாது. ஏழை நாடுகளுக்கோ 25 சதவீதம் வரை கூட அதிகரிக்குமாம். ஏற்றுமதி மட்டுமே நம் வளர்ச்சியைத் தூண்டி விடப் போவதில்லை' என்ற தனது கருத்தைப் பதிவிட்ட நூலாசிரியர், உலகமயத்தால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளை விவரிக்கும் பல கவிதைகளை எடுத்துக்காட்டுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com