இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது - ஆனந்த் கிரிதரதாஸ்; தமிழில்: அவைநாயகன்; பக்.360; ரூ.300; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-3; ) 04259- 236030.
இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது - ஆனந்த் கிரிதரதாஸ்; தமிழில்: அவைநாயகன்; பக்.360; ரூ.300; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-3; ) 04259- 236030.
 1970 - களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா நாட்டில் கிளீவ்லாந்தின் ஓஹியோ புறநகர்ப் பகுதிக்கு குடி பெயர்ந்த இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் நூலாசிரியரான ஆனந்த் கிரிதரதாஸ். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவாக இருந்தாலும், அவருள்ளே இந்திய மண்ணின் மீதான தாகம் எப்போதும்நிறைந்திருந்ததால், அமெரிக்காவில் இருந்த மெக்கின்சி நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இந்தியா வந்து சேர்ந்தார். வேலை தொடர்பாகவும், தன் ஆர்வத்தின் காரணமாகவும் இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்தார். அப்போது இந்தியாவில் நிகழ்ந்த மாறுதல்களை உன்னிப்பாகக் கவனித்து தன் உணர்வுகளை, கருத்துகளை மிக அற்புதமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
 நூலாசிரியர் சந்திக்கும் ரவீந்திரா என்ற மிகவும் பின்தங்கிய ஏழை ஒருவரின் முயற்சி, முன்னேற்றம், திட்டமிடுதல், வளர்ச்சி பற்றியும், அதற்காக அவர் இழந்த காதல், குடும்ப வாழ்க்கை பற்றியும் துல்லியமாக இந்நூல் சித்தரிக்கிறது.
 இந்திய சாதிமுறை வெறும் சாதி முறையாக மட்டும் இல்லாமல், அதன் அடிப்படையிலான வாழ்க்கைமுறை, மனோபாவம் இன்றைய உலகமய காலத்திலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் பணியாளர்கள், அங்கு வருபவர்களின் நடவடிக்கைகளில் தொடர்வது சிந்திக்க வைப்பதாக உள்ளது.
 இந்தியாவில் மாவோயிசம் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், அவற்றின் இன்றைய நிலை கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என இன்றைய இந்திய சமூகத்தைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியாகவும் இந்நூல் இருக்கிறது.
 அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் வாழ்ந்த ஒருவரின் விமர்சனப்பூர்வமான பார்வையில் இந்த நாட்டை பார்க்கும் உணர்ச்சிகரமான அனுபவத்தை வாசகர்களுக்கு இந்நூல் வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com