முகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்
கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்
By DIN | Published On : 07th October 2019 03:51 AM | Last Updated : 07th October 2019 03:51 AM | அ+அ அ- |

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள் - ப.முத்துக்குமாரசுவாமி; பக்.526; ரூ.430; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; ) 044- 2813 2863.
பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகிய மூவரும் மிகச் சிறந்த தமிழ்க் கவிஞர்கள் எனினும், மூவரின் காலமும், பின்னணியும் வேறுபாடுகள் உடையவை. பாரதியாரின் காலம் சுதந்திரப் போராட்ட காலம். அந்தப் பின்புலத்தில் பாரதியார் சிந்தித்தவை, எழுதியவை இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு, தமிழ் இனம், மொழி சார்ந்த அரசியல் பார்வையில் பாரதிதாசனின் கவிதைகள் தோன்றின. கண்ணதாசன் எழுதிய கவிதைகளில் பாரதிதாசனின் தொடர்ச்சி இருந்தாலும் கண்ணதாசனின் அரசியல் பார்வை வேறுபட்டபோது அவருடைய கவிதைகளும் அதை வெளிப்படுத்தின. எனினும் முப்பெரும் கவிஞர்களின் தமிழ்ப்பற்று குறிப்பிடத்தக்கது.
பெண்களின் முன்னேற்றம் குறித்து பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இருந்த ஒற்றுமை; பெண்கள் குறித்த கண்ணதாசனின் பார்வை ஆகியவற்றை நிறைய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார். இந்நூல், முப்பெரும் கவிஞர்களின் படைப்புகளைப் பற்றி விரிவான ஆய்வாக, தமிழ்க் கவிதை ஆர்வலர்களுக்குப் பயன்படும்விதத்தில் எழுதப்பட்டுள்ளது.