பெண்ணியம்

பெண்ணியம் - இரா.பிரேமா; பக்.216; ரூ.90; பாரி புத்தக பண்ணை, சென்னை-104; ) 044- 2523 4559.
பெண்ணியம்

பெண்ணியம் - இரா.பிரேமா; பக்.216; ரூ.90; பாரி புத்தக பண்ணை, சென்னை-104; ) 044- 2523 4559.
 பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது அல்ல; காலம் காலமாக அடிமைப்பட்ட பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, கல்வியின் மூலமாக அவர்களை வளர்த்தெடுத்து உயர்த்துவதே பெண்ணியத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.
 பெண்ணியம் எவ்வாறு தோன்றியது? அது தோன்றுவதற்கான பின்னணி, உலக அளவில் பேசப்படும் பெண்ணிய வகைகள், பலவிதமான பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் கருத்துகள் என விரிவாக இந்நூல் பேசுகிறது.
 வேத காலத்தில் யாக்ஞவல்கியருடன் வாதிட்ட கார்கி போன்ற பெண்மணிகளும் இருந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக கல்வி கற்பது, வேள்வி செய்வது வேதகாலத்தில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில்தான் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு இருக்கிறது.
 18 ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த தோள்சீலைப் போராட்டமே, இந்திய மண்ணில் நடந்த முதல் பெண்விடுதலைக்கான போராட்டம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள், நீதிபதி மகாதேவ கோவிந்த ராணடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் பெண்களின் முன்னேற்றத்துக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் உட்பட இந்தியாவின் பெண்ணியம் சார்ந்த வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
 பெண்ணியம் தொடர்பான பலவிதமான பார்வைகளும், புரிதல்களும் உள்ள இக்காலத்தில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com