மாடும் வண்டியும்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு) - த.ஜான்சி பால்ராஜ்; பக்.126; ரூ.130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; ) 044- 2625 8410.
மாடும் வண்டியும்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு) - த.ஜான்சி பால்ராஜ்; பக்.126; ரூ.130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; ) 044- 2625 8410.
 டிராக்டர்கள் வந்த பின் நிலத்தை உழ மாடுகள் தேவையில்லாமற் போய்விட்டன. அதுமட்டுமல்ல, விளைவித்த பொருள்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட மாட்டுவண்டிக்கான தேவையும் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் பயணம் செய்ய மாட்டு வண்டிகள் கூண்டு வண்டிகளாக மாறின. ஆடம்பரமான வில் வண்டிகளும் வந்தன. நவீன வாகனங்கள் அவற்றை இல்லாமற் செய்துவிட்டன.
 இந்நூல் மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? மாட்டுவண்டிகளின் பாகங்கள் எவை? அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எவை? மாட்டுவண்டியை எவ்வாறு ஓட்ட வேண்டும்? மாட்டு வண்டிகளின் இன்றைய நிலை எவ்வாறு உள்ளது? என்பதைப் பற்றி விளக்குகிறது.
 மாடும், மாட்டு வண்டியும் விவசாயப் பொருளாதாரத்தில் பெற்றிருந்த இடம், விவசாயப் பொருளாதாரத்தில் மாற்றம் வரும்போது மாடுகளின், மாட்டு வண்டிகளின் பயன்பாடும், மதிப்பும் மாறிப்போனது, மாட்டு வண்டி செய்பவர்கள் உட்பட பலருக்கும் வேலையில்லாத நிலை ஏற்படுவது, மாட்டு வண்டி சார்ந்த பண்பாட்டு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என இந்நூல் விரிவாகப் பேசுகிறது. சிறந்த வரலாற்று ஆவணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com