சுடச்சுட

  


  காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை - பாரதியார் ஆய்வகம் நடத்தும் பாரதியார் நினைவுநாள் விழா. தலைமை: எம்.சுந்தரவடிவேல்; பங்கேற்பு: சுந்தர ஆவுடையப்பன், பா.ஆனந்தகுமார், வீ.நிர்மலாராணி ; வெள்ளி விழா அரங்கம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்;  11.9.19  காலை 11.45.

  தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி தமிழ்த்துறையின் வாகை - தமிழ் மன்றம் நடத்தும் பாரதி விழா. தலைமை: வ.இலட்சுமி; பங்கேற்பு: நா.இராஜேந்திர நாயுடு,  பாரதி தமிழன்;  கண்ணன் அரங்கம்,  தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, தருமமூர்த்தி நகர், பட்டாபிராம், சென்னை-72;  12.9.19  பிற்பகல்  2.30.

  சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. "ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்'-நூல் மதிப்புரை; பங்கேற்பு:  திருப்பூர் கிருஷ்ணன்;  சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 12.9.19 மாலை 5.00.

  திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: இராம.குருநாதன்; பங்கேற்பு: தி.வே.விஜயலட்சுமி, வா.மு.சே.ஆண்டவர், செ.தட்சணாமூர்த்தி;  குரு வள்ளுவம் வளாகம், 17, அம்மன்கோவில் தெரு, வாணுவம்பேட்டை, சென்னை-91;  14.9.19  மாலை 5.30.

  இலக்கியச்சோலை நடத்தும் பத்தாம் ஆண்டு விழா.   பங்கேற்பு:  கவிஞர் முத்துலிங்கம், பார்வதி பாலசுப்பிரமணியன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், வாசுகி கண்ணப்பன், வே.எழிலரசு, கூ.குருமூர்த்தி,  சோலை தமிழினியன், இராம.இளங்கோவன், ஜெ.பாஸ்கரன், மு.மேத்தா,  கார்முகிலோன்;  இக்சா மையம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8;  14.9.19  காலை 10.00. 

  முத்துநகர் இலக்கிய வட்டம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: இரா.கலியபெருமாள், க.சுப்புலெட்சுமி;  சுதன் இல்லம், 36 ஏ, நாட்டுக்கோட்டை செட்டித் தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி;  15.9.19  காலை 10.30. 

  சிவநேயப் பேரவையின் ஏழாவது ஆண்டு விழா. பங்கேற்பு:  வீ.கலைச்செல்வன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஈசநேசன் மகஸ்ரீ,  ஆனந்தி ஸ்ரீராமன்,  நீரை அத்திப்பூ, எஸ்.சுவாமிநாதன், மு.முத்துசீனிவாசன்; லஷ்மி கோவிந்தராஜன் அறக்கட்டளை அரங்கம்,  29,  சதாசிவ நகர் வடக்கு, முதல் பிரதான சாலை, மடிப்பாக்கம், சென்னை-91;  15.9.19  காலை  9.30.

  தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் குறுந்தொகை தொடர் சொற்பொழிவு. தலைமை: கு.வெள்ளைச்சாமி; பங்கேற்பு:  முகிலை இராசபாண்டியன், சுதா முருகேசன்,  த.புகழேந்தி, இராம.குருமூர்த்தி ;  வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகர்த் தமிழ்ச்சங்க வளாகம், மகாலட்சுமி தெரு, வண்டலூர், சென்னை-48;  15.9.19  மாலை 4.30.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai