திருவண்ணாமலைத் திருவருள்

திருவண்ணாமலைத் திருவருள் - இளையவன்; பக்.96; ரூ.100; இலக்கியச் சாரல், எல்.11/540, 24 ஆவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. 
திருவண்ணாமலைத் திருவருள்

திருவண்ணாமலைத் திருவருள் - இளையவன்; பக்.96; ரூ.100; இலக்கியச் சாரல், எல்.11/540, 24 ஆவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41.
 "திருச்சுழி' என்ற திருத்தலத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தன்று அவதரித்தது ஒரு ஞான ஒளி.
 "அருணாசலம்' என்று கேட்ட மாத்திரத்தில், "நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவுப்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் ஒருவரும் விசனப்பட வேண்டாம்' என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு, பதினேழு வயதில் பால சந்நியாசியாகக் கிளம்பிய வெங்கடராமன், தமிழ்நாடு செய்த தவப்பயனாய், அருணாசலத்திடம் ஐக்கியமாகி, ஆன்மிக உலகுக்கு ஸ்ரீ ரமண மகரிஷியாக ஞான ஒளி பாய்ச்சிய அவதார புருஷர். அவரது வரலாற்றுச் சம்பவங்கள் சிலவற்றை (ஐம்பதுக்கும் மேல்) இந்நூல் எடுத்துரைக்கிறது.
 ஸ்ரீ ரமணரின் உபதேசம் விசார மார்க்கமாகும். அதில் வேதாந்த சாரமும் இருந்தது. சித்தாந்த சாரமும் இருந்தது. 54 ஆண்டுகள் திருவண்ணாமலையில் தங்கி அங்கு ஞான ஒளி பரப்பி, பல நாட்டவரையும் தன் கருணையினால் வசப்படுத்தியவர். மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தியவர் அவர்.
 ஸ்ரீ ரமணரிடம் மாற்றத்தை ஏற்படுத்திய பெரியபுராணம், அவரைக் கண்ணீர் விட வைத்த கண்ணப்ப நாயனார் வரலாறு, மடைமாற்றம் நிகழக் காரணமாக இருந்த அண்ணன் நாகசாமியின் "இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு?' என்ற வைர வரிகள், தன் அன்னைக்கும் உலகத்தாருக்கும் சொன்ன ஐந்து வரி உபதேசம், சாஸ்திரி கொடுத்த காகிதத்தில் இருந்த ஸ்லோகத்தின் மகிமை - இப்படிப் பல்வேறு சுவையான }நெஞ்சை நெகிழ வைக்கும் கண்களில் நீர் கோக்க வைக்கும் நிகழ்ச்சிகள் அருள் வாசகமாக இந்நூலில் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com