ஆழி பெரிது

ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல் - அரவிந்தன் நீலகண்டன்; பக்.367; ரூ.330; தடம் பதிப்பகம் -எப்1, அருணாசலா பிளாட்ஸ், லக்ஷ்மி நகர், நன்மங்கலம், சென்னை-129.
ஆழி பெரிது

ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல் - அரவிந்தன் நீலகண்டன்; பக்.367; ரூ.330; தடம் பதிப்பகம் -எப்1, அருணாசலா பிளாட்ஸ், லக்ஷ்மி நகர், நன்மங்கலம், சென்னை-129.
 இன்று வேத பாரம்பரியம் குறித்து அரசியல் சாயத்துடன் பல விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றன; வேத காலம் என்பது எப்படி இருந்திருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் ஓரளவுக்கு விளக்கம் அளிக்கிறது.
 வேத கால அக்னி வளர்ப்பு, அஸ்வமேத யாகம், சரஸ்வதி நதி பற்றிய சர்ச்சை போன்றவற்றை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர். அதுபோலவே இந்திய பாரம்பரியத்தில் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதில் முற்றிலும் உண்மையில்லை என்று நிறுவுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.
 பெண்களைப் பொருத்தவரை, வேத காலத்தில் காணப்படாத சில சமூக நிலைப்பாடுகள் இடைக்காலத்தில் ஏற்பட்டன. இடைக்கால இழிவு நிலைகளைப் போக்குவதற்கு, இந்தியர்களே எவ்வகையான முயற்சிகளை மேற்கொண்டனர் என்று "விடுவித்த வேதம்' என்னும் அத்தியாயத்தில் விவரிக்கிறார் நூலாசிரியர்.
 சுதந்திர இந்தியாவில் இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களின் விவரணங்களில் வதைபடும் பசுமாமிச விவகாரம், "பசுவதையும் வேதப் பண்பாடும்' என்னும் அத்தியாயத்தில் விரிவாக அலசப்படுகிறது. பசு கொல்லப்படத் தகாதது என வலியுறுத்துகிறது கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை.
 விவசாயத்தில் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உள்ள ரிக் வேத மந்திரம் விளக்கப்படுகிறது.
 "காலத்தைக் கட்டமைக்கும் மனம்' என்னும் அத்தியாயத்தில் நவீன உளவியல் சித்தாந்தங்கள் யஜுர் வேதத்தில் காணக் கிடைப்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
 பாரதிய மரபின் வேராக உள்ள வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு கூறுகளை விளக்கும் விதமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. அவை பொருட்டு எழுந்துள்ள பல சர்ச்சைகளையும் ஆராய்ந்து, அவற்றுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com