Enable Javscript for better performance
வெற்றி உங்கள் கையில் - கீழாம்பூர்- Dinamani

சுடச்சுட

    

    வெற்றி உங்கள் கையில் - கீழாம்பூர்

    By கலைமகள் பப்ளிகேஷன்ஸ்  |   Published on : 20th January 2020 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    book2

    வெற்றி உங்கள் கையில் - கீழாம்பூர் ; பக்.88; ரூ.75;  கலைமகள் பப்ளிகேஷன்ஸ், சென்னை-4; 044- 2498 1699.

    நூலாசிரியர்    பல நிறுவனங்களில் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திய அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருக்கிறார்.  16 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்நூலில் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் தேவையான பல அரிய கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.   

    வாழ்க்கையில் முன்னேற எந்த ஒரு மனிதருக்கும் லட்சியங்கள் இலக்காக இருக்க வேண்டும்.  அந்த இலக்கை அடைய  உழைப்பு மிக அவசியம்.  எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.  பிற மனிதர்களுடன் பழகும்போது  ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க,   பிறருடனான தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருக்க வேண்டும்.  பிறருடன் பேசுவது மட்டுமல்ல, உடல் மொழியும் கூட தகவல் பரிமாற்றம்தான்.  வாழ்வில் பல சந்தர்ப்பங்களில்   சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.  "நான்' என்கிற தலைக்கனத்தைக் கழற்றி வைக்க வேண்டியிருக்கும். நமது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தனிநபர் முன்னேற்றத்திற்காக வழிகாட்டும் நூலாசிரியர், தொழில்துறை முன்னேறுவதற்கு எவை தேவை என்பதையும் விளக்கியிருக்கிறார்.  ஆழ்ந்த பொருளுள்ள பல விஷயங்கள்,  மிகவும் எளிமையாக, சுருக்கமாக, தெளிவாக  இந்நூலில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai