உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்)

உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்) - எஸ்.சங்கரநாராயணன்; பக்.496; ரூ.400; நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை-92.
உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்)

உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்) - எஸ்.சங்கரநாராயணன்; பக்.496; ரூ.400; நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை-92.

நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், திரட்டு நூல்கள், கட்டுரை நூல் என ஏறத்தாழ 90 நூல்களை எழுதிய நூலாசிரியரின் படைப்புலக அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன.

"சமூக அக்கறையற்ற படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது' என படைப்புகளின் நோக்கம் குறித்த தெளிவான புரிதலுடன், தன்னைக் கவர்ந்த பல படைப்புகளைப் பற்றி தனது கருத்துகளை தெளிவாக நூலாசிரியர் இந்நூலில் முன் வைத்திருக்கிறார்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இவர் எழுதிய விமர்சனம் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழின் முதல் படைப்பு முயற்சிகளான கமலாம்பாள் சரித்திரம், மாதவையாவின் படைப்புகள் உட்பட சமகால எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய நூலாசிரியரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எம்.ஜி.சுரேஷ். ம.ந.ராமசாமி போன்ற பல எழுத்தாளர்களுடன் நூலாசிரியருக்கிருந்த நட்பைப் பேசும் கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன.

ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுஜாதா, லா.ச.ரா ஆகியோரின் தனித்துவமான பண்புகளைப் பற்றிய நூலாசிரியரின் பார்வை, மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றிய அவரின் கருத்துகள், மொழிபெயர்ப்பு அனுபவங்கள் என நூல் முழுவதும் படைப்புலக வானில் பறந்து திரிகிறது. வாழ்க்கை வெற்றிகள் அல்ல. தோல்விகளும் அல்ல. வாழ்க்கை ஓர் அனுபவம். இந்த நூல், படைப்புலக அனுபவம்.

காவிரி மகாத்மியம் - வே.மகாதேவன்;பக்.206; ரூ.100; இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம், 10, சிவசங்கரன் தெரு, இராஜாஜி நகர், ஜமீன் பல்லாவரம், சென்னை-43.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com