காவிரி மாகத்மியம்

காவிரியின் மகிமை இதிகாச-புராணங்களில் மட்டுமல்லாமல் பழந்தமிழ் இலக்கியங்களிலும் பெரிதும் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. பொன்னி எனும் காவிரி புராணப் பெருமையுடையது.
காவிரி மாகத்மியம்

காவிரியின் மகிமை இதிகாச-புராணங்களில் மட்டுமல்லாமல் பழந்தமிழ் இலக்கியங்களிலும் பெரிதும் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. பொன்னி எனும் காவிரி புராணப் பெருமையுடையது. அத்தகைய காவிரி நதியின் நதி மூலத்தையும் ரிஷிமூலத்தையும் பெருமையாக விரித்துரைக்கிறது இந்நூல்.

தேவாரப் பாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டவை காவிரிக் கரையில் அமைந்தவை என்கிற பெருமைக்குரியவை. "அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பொங்கி வழிந்தது காவிரி' என்கிற இலக்கண உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்தை மேற்கோள் காட்டுவதுடன், லோபாமுத்திரைதான் தன் தவப் பயனாகக் காவிரி நதியாக உருமாறினாள்; 2017-இல் நடந்த புஷ்கரம் மகாபுஷ்கரம் அல்ல; அகத்தியரால் உருவான ஆறு காவிரி மட்டுமல்ல... இன்னும் பல உள்ளன; "காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகள்' என சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் "காவிரிக் கோட்டம்' என்பதற்கு கு.சுந்தரமூர்த்தி "காவிரிக் கரை' என்று விளக்கம் தந்திருப்பதால், காவிரிக் கோட்டமும் காவிரிக் கரையும் ஒன்றா? என்பது ஆய்வுக்குரியது; ஸ்ரீரங்கநாதர் காவிரிக் கரைக்கு வந்து சேர்ந்தது, காவிரியில் நீராடிய மன்னனின் மாலை சிவபெருமான் கழுத்தைச் சென்றடைந்த விதம்; சில காலங்கள் தடைபட்ட காவிரியின் ஓட்டம் தகர்க்கப்பட்ட விதம் - இவ்வாறு பல்வேறு புதிய பல தகவல்களையும் இந்நூல் தருகிறது .

காவிரி தொடர்பான அனைத்தும் இம்மகாத்மியத்தில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com