கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம ஊராட்சி அதன் பணிகளைச் செய்வதற்கான நிதியை எந்தெந்த வழிகளின் மூலம் எல்லாம் பெறுகிறது?
கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 - ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்நூல் கிராம ஊராட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து தந்திருக்கிறது.

கிராம ஊராட்சிகளின் அதிகார எல்லைகள் எவை? ஊராட்சித் தலைவரின், இதர பணியாளர்களின் பணிகள் எவை? குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கிராம ஊராட்சி அமைப்பு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை அமைப்பது, அதைப் பராமரிப்பது, மேம்படுத்துவது என அதன் பணிகள் விரியும். தெருவிளக்கு எனில் எத்தனை தெருக்கள், எவ்வளவு விளக்குகள், அவற்றை அமைப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் ஊராட்சி அமைப்புதான் செய்ய வேண்டும்.

கிராம ஊராட்சி அதன் பணிகளைச் செய்வதற்கான நிதியை எந்தெந்த வழிகளின் மூலம் எல்லாம் பெறுகிறது? மத்திய, மாநில அரசின் நிதிகள், வரிகளின் மூலம் கிடைக்கும் நிதி, மீன்கள், தோப்புகள் ஆகியவற்றைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய், கட்டடம் கட்ட அனுமதி தருதலின் மூலம் கிடைக்கும் நிதி என பல வகைகளில் எவ்வாறெல்லாம் ஊராட்சி அமைப்புகள் நிதி திரட்ட முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நடைபெறும் பணிகள் ஆகியவை பற்றியும் விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கும், கிராம ஊராட்சிகளில் பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் பயன்படும் சிறந்த கையேடு இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com