கேரக்டர் (பாகம்-1)

கேரக்டர் (பாகம்-1) - கலைஞானம்; பக்.336; ரூ.280- (பாகம்-2) பக். 328; விலை: ரூ.280; நக்கீரன் வெளியீடு, சென்னை- 14;  044-4399 3029. 
கேரக்டர் (பாகம்-1)

கேரக்டர் (பாகம்-1) - கலைஞானம்; பக்.336; ரூ.280- (பாகம்-2) பக். 328; விலை: ரூ.280; நக்கீரன் வெளியீடு, சென்னை- 14;  044-4399 3029. 
திரைப்பட  கதாசிரியர், நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்ட கலைஞானம் எழுதிய திரையுலக அனுபவங்
களின் தொகுப்பு.   சென்னை பாண்டிபஜாரில் கார் ஓட்டுநர்கள் 4 பேர் சினிமா கனவுகளுடன் இருந்தார்கள்.
அவர்களின் கனவு நிறைவேறியதா... என்பதை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். அந்த 4 பேரில் ஒருவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம். 
கே.பாக்யராஜின் "இது நம்ம ஆளு' படத்தில் ஐயர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். படிக்கத் தொடங்கினால் நூலை கீழே வைக்க முடியாத அளவுக்கு அடுக்கடுக்கான சம்பவங்கள் நம்மை ஈர்க்கின்றன. கலைஞானத்தின் பங்களிப்பில் உருவான சினிமா கதைகள், டி.ஆர். ராஜகுமாரி, ஸ்ரீவித்யா உள்பட பல்வேறு திரை நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கைக் கதைகள் என தனது கதை ஞானத்தை வாரி வழங்கியிருக்கிறார்.  
கே.ஏ.தங்கவேலு தம்பதியின் வாழ்க்கைக் கதையைச் சொல்ல வரும்போது, அதனிடையே மு.வரதராசனாரின் "கள்ளோ காவியமோ' கதையை உட்புகுத்தியிருக்கும் பாங்கு கதாசிரியரின் இலக்கியப் புலமைக்குச் சான்று. 
"எதிர்வீட்டு ஜன்னல்', "நெல்லிக்கனி' ஆகிய 2 படங்களை இயக்கி, "மிருதங்கச் சக்கரவர்த்தி', "ராஜரிஷி' உள்ளிட்ட 16 படங்களைத் தயாரித்து, 55 ஆண்டுகள் திரையுலகில் பல்வேறு பொறுப்புகளில் பழுத்த அனுபவம் பெற்ற கலைஞானத்திடம் இன்னும் எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்பதையே இந்நூல் உணர்த்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com