சா-

சா-  கு. ஜெயபிரகாஷ்; பக்.128; ரூ.120;   ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை.
சா-

சா-  கு. ஜெயபிரகாஷ்; பக்.128; ரூ.120;   ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை.
மரணத்தை எண்ணத்தில் கொண்டு எழுத்தாக மாற்றுவதைப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை அல்லது முன் வருவதில்லை.
தமிழில் மரணம் தொடர்பாக வெளிவந்த நூல்களை, புதினங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், சம்பத்தின் "இடைவெளி'யையும் சேர்த்து. இத்தனைக்கும் சித்தர்கள் வாழ்ந்த நிலம் இது. இங்கே மரணத்தைப் பாடாத சித்தர்களே இல்லை. பழந்தமிழ்க் கவிஞர்கள் பாடிய தனிப் பாடல்கள் ஏராளம்.  ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் வருகின்றன. தமிழில் பதிவுகள் குறைவே.
கு. ஜெயபிரகாஷ் எழுதிய 'சா' நாவல் (ஓரிடத்தில் நூல் என்றும் எச்சரிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) இந்தப் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
"சாமந்தி, சாந்தி, சாவித்ரி, சாதனா, சாவு, சாலை, சாராயம் என எல்லாமும் "சா' என்ற எழுத்தினுள் உருக்கொண்டு என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது' என்கிறார் கதைத் தலைவனின் சொற்களில் ஜெயபிரகாஷ்.
தொடக்கத்திலிருந்தே அவருடைய விவரிப்பு, சாவென்ற மையப் புள்ளியையே சுற்றி வருகிறது என்றாலும் துண்டுதுண்டாகக் கிடக்கிறது. அந்த விவரணமே சாதகமான விஷயமாக இருப்பதாகத் தோன்றினாலும், நாவலின் கதைப் போக்கில் குறுக்கிடுவதாகவும் இருக்கிறது.
ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும் குறிப்பிடப்படும் மேற்கோள்கள் அந்தந்த நூல்களை, அந்தந்த ஆளுமைகளைத் தேடிச் செல்வதற்கான நல்லதொரு தூண்டுகோல்.
சா- நல்ல முயற்சி. இந்தக் குறுநாவலையே விரித்தெழுதி இன்னும் பெரும் புதினமொன்றை எதிர்காலத்தில் ஜெயபிரகாஷ் படைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com