ஆதிசங்கரர் - ஜெகாதா

ஆதிசங்கரர் - ஜெகாதா; பக்.272; ரூ.250; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை -1; )0452 - 2345971. 
ஆதிசங்கரர் - ஜெகாதா

ஆதிசங்கரர் - ஜெகாதா; பக்.272; ரூ.250; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை -1; )0452 - 2345971.
 ஆன்மிக ஸ்தலமாக பல சிறப்பம்சங்களைக் கொண்ட காஞ்சிபுரத்தில் (சத்யவிரத úக்ஷத்ரம், நகரேஷு காஞ்சி) ஸ்ரீசங்கர மடத்தை ஸ்தாபித்த ஸ்ரீ சங்கரர் என்கிற ஆதிசங்கரரின் வாழ்க்கைச் சரிதம், 35 தலைப்புகளில் எளிமையாக இந்நூலில் தரப்பட்டிருக்கிறது.
 ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைதத்தை பரப்பி வென்றெடுத்ததை இந்நூல் விளக்கியிருக்கிறது. ஆதிசங்கரர் அன்னை துர்காதேவியிடம் ஞானப்பால் அருந்தியது, சந்நியாசம் பூணுவதற்கு தன் தாயிடமே ஆசி பெற்றது ஆகியவை ஆதிசங்கரர் அருளிய "செளந்தர்ய லஹரி'யில் இருந்து மேற்கோள்காட்டப்பட்டிருக்கிறது.
 வேதங்களில், வாயு புராணத்தில், செளர புராணத்தில், பல சங்கர விஜய பதிவுகளில், ஸ்ரீராமபிரானுக்கு யக்ஷன் கூறிய குறிப்புகளாக "விஷ்ணு தர்மோத்தரா' என்ற நூலில் ஸ்ரீ ஆதிசங்கரரின் அவதாரம் பற்றிய முன்னறிவிப்புகள் வந்திருப்பதை இந்நூல் விளக்கி வெளிக்கொணர்ந்துள்ளது.
 முப்பத்திரண்டாம் வயதில் பஞ்ச பூதங்களோடு ஐக்கியமான அந்த மகான், தன் குருவைத் தேடிச் சென்றபோது, "நீ யார்?' என்று குரு கேட்டதற்கு சங்கரர் தந்திருக்கும் விளக்கம் "தச ஸ்லோகி' என்கிற பத்து செய்யுள்களாக அருளப்பட்டிருக்கிறது. "தத்துவமசி' (அது நீயே) என்கிற உபநிஷத மகாவாக்கியம் குறித்தும், மக்களின் கடமைகளாக "உபதேச பஞ்சகம்' என்கிற ஐந்து ஸ்லோகங்களாகவும் சீடர்களுக்கு அளித்திருக்கும் விளக்கம் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com