ஞாபகச் சுவடு

ஞாபகச் சுவடு - ஆ.ப.செந்தில்குமார்; பக்.90; ரூ.100; காக்கை பிரதிகள், 67/4, 34 ஆவது வினோபாஜி தெரு, ஜி.கே.எம்.காலனி, சென்னை-82.
ஞாபகச் சுவடு

ஞாபகச் சுவடு - ஆ.ப.செந்தில்குமார்; பக்.90; ரூ.100; காக்கை பிரதிகள், 67/4, 34 ஆவது வினோபாஜி தெரு, ஜி.கே.எம்.காலனி, சென்னை-82.
 இதழியல்துறையில் அனுபவமிக்க நூலாசிரியர், அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய, சம்பவங்களைப் பற்றிய அறிமுகமாக இந்நூலை எழுதியிருக்கிறார். ஓவியர் ஆதிமூலம், விஸ்வம், நெடுஞ்செழியன், பொன் ரகுநாதன், ஓவியர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் குறித்த தகவல்கள் வியக்க வைக்கின்றன.
 "மரணம் சில குறிப்புகள்' கட்டுரை " மரணம் என்பது என்ன? நிரந்தரமாகத் தூங்குதல் தவிர, வேறொன்றுமில்லை' என்கிறது.
 "பிரபஞ்சன் எனும் ஆளுமை' கட்டுரையில், "ரஷ்ய எழுத்தாளரைப் பாருங்கள், ஜப்பானிய எழுத்தாளரைப் பாருங்கள் என்று ஆங்காங்கே குரல்கள் அவ்வப்போது எதிரொலிக்கும். ஆனால் என்னைப் பொருத்தமட்டிலும் பிரபஞ்சனைப் பாருங்கள் என்றுதான் சொல்வேன்'' என்கிறார் நூலாசிரியர்.
 சேலம் வந்திருந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற அனுபவம் சுவைபட சொல்லப்பட்டுள்ளது. இராமலிங்கம் பிள்ளையின் " என் கதை', திருப்பூர்கிருஷ்ணனின் படைப்புகள் பற்றிய கட்டுரை, விஜயா பதிப்பகம் வேலாயுதம், நாட்டுப்புறப் பாடகர் கே.ஏ.குணசேகரனின் நேர்காணல்கள் என நூலின் பதிவுகள் அனைத்தும் அருமை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com