அண்ணலாரின் ஆளுமைகள்

அண்ணலாரின் ஆளுமைகள் - கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்; பக்.207; ரூ.175; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை-12; )044-2662 4401. 
அண்ணலாரின் ஆளுமைகள்

அண்ணலாரின் ஆளுமைகள் - கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்; பக்.207; ரூ.175; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை-12; )044-2662 4401.
 அரேபிய நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பு நிலவிய தவறான கோட்பாடுகளை, கி.பி. 571-இல் மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அகற்றி புதிய ஆன்மிகம், சமூக, அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை எப்படி உருவாக்கினார் என்பது குறித்தும் அவரது ஆளுமைகள் குறித்தும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.
 40 வயது வரை மற்றவர்களைப் போல் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்த நபிகள் நாயகத்துக்கு இறைவனின் தூதர் என்ற அருள்கொடை கிடைத்தவுடன் மக்களுக்கு வாழ்வியல் போதனைகளை வழங்கினார்.
 இறைவன் ஒருவனே! நேர்மை, எளிமை, பணிவு, நீதியை நிலைநாட்டுதல், சுயமரியாதை போற்றுதல், அளவின்றி வாரி வழங்குதல், அடித்தட்டு மக்களை நேசித்தல், போரின்போது தர்மங்கள் கடைப்பிடித்தல், அனைத்து சமயத்தவரையும் சமமாக நடத்துதல், வருமானத்தில் 2.5 சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு இறைக் கட்டளைகளை அறிவித்து அதற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம் (ஸல்).
 "ஏழைகளை மதியுங்கள்! நேசியுங்கள். ஏழைகளையும், தேவையுள்ளவர்களையும் உங்களுக்கு நெருக்கமாக ஆக்கிக் கொண்டால் இறைவன் உங்களை அவனுக்கு நெருக்கமானவர்களாக ஆக்கி கொள்வான்!''
 இவைபோன்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான போதனைகளை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.
 நபிகளாரின் அருங்குணங்கள், தலைமைத்துவப் பண்புகள், மனித நேயச் செயல்பாடுகள், தோழர்களின் மீது பொழிந்த பாசம் போன்றவற்றில் அவரது ஆளுமைப் பண்புகளை அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படுகிறது.
 வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்த நபிகளாரின் போதனைகள், அவர் வாழ்வின் எந்தவிதமான பின்புலத்தில் வெளிப்பட்டன என்பதை "அண்ணலாரின் ஆளுமைகள்' நூல் எடுத்துரைக்கிறது.
 நபிகள் நாயகத்தின் (ஸல்) ஆளுமைப் பண்புகளை அனைவரும் அறிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com