தலைமைப் பண்புகள்

தலைமைப் பண்புகள் - கம்பர் காட்டியவை - இறையன்பு; பக்.240; ரூ.220; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044-24314347.
தலைமைப் பண்புகள்

தலைமைப் பண்புகள் - கம்பர் காட்டியவை - இறையன்பு; பக்.240; ரூ.220; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044-24314347.
 தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய குண நலன்களை ராமாயணத்தில் வருகிற பாத்திரங்களின் வழியாக உரசிப் பார்த்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
 "நல்ல தலைவனின் ஆற்றல் அமைதிக் காலத்தில் வெளிப்படுவதில்லை. குழப்பமும், போரும், பிணியும் ஏற்படுகிறபோதுதான் யார் நல்ல தலைவன் என்று நம்மால் அடையாளம் காண முடியும்', "ராமனுக்குத் திறன் மிகுந்த தம்பியர் பக்க பலமாக இருந்தனர்; ராமன் ஆட்சியை நடத்துவதற்கு அவன் தம்பியரே இரண்டாம்நிலைத் தலைவர்களாகச் செயல்படுவார்கள் என்ற தெளிவான பார்வை தசரதனிடம் இருந்தது', "மக்களை ஆளும் தலைவன் தாயைப்போல இருக்க வேண்டும் என்று கம்பர் வலியுறுத்துகிறார்' என்று பல்வேறு உதாரணங்களின் மூலம் கம்ப ராமாயணத்தின் நுட்பங்களை விவரிக்கும் நூலாசிரியர், அதனைத் தற்காலச் சூழலோடு பொருத்திக் காட்டுவது சிறப்பு. "எளிமையும் கவர்ச்சியும்' என்ற கட்டுரையில் எளிமையாக வாழ்ந்த தலைவர்களை இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டுகிறார்.
 "ராமன் யாருடன் பழகும்போதும் தன்னை அரசகுலத்தைச் சார்ந்தவனாகவோ, உயர்ந்தவனாகவோ காட்டிக்கொள்ளாமல் ஒரே நேர்த்தியோடு பழகினான். இத்தகைய எளிமையும், கம்பீரமும் கலந்த தலைமையே இன்று நிறுவனங்களில் தேவைப்படுகிற அவசியமான பண்பு' என்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 25 கட்டுரைகள் அடங்கிய இந்நூல், மேலாண்மைக் கல்வி பயிலும் மாணவர்களுக்குச் சிறந்த கையேடாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com