சிலிங்

சிலிங்- கணேசகுமாரன்; பக். 85; ரூ. 110; எழுத்து பதிப்பகம், 55 (7) ஆர் பிளாக், 6ஆவது அவென்யூ, அண்ணாநகர், சென்னை- 600040.
சிலிங்

சிலிங்- கணேசகுமாரன்; பக். 85; ரூ. 110; எழுத்து பதிப்பகம், 55 (7) ஆர் பிளாக், 6ஆவது அவென்யூ, அண்ணாநகர், சென்னை- 600040.
 கண்ணாடி உடையும் போது கிடைக்கும் ஒலியாகிய "சிலிங்' என்பதையும், இப்போதைய சூழலில் பெரும்பாலானோருக்குத் தேவைப்படும் மனோதத்துவ "கவுன்சிலிங்' என்பதன் கடைசி மூன்று எழுத்தைக் கொண்ட "சிலிங்'- கும் தான் தனது குறுநாவலின் பெயருக்கான பொருள் என்கிறார் நூலாசிரியர்.
 இரு பாகங்கள். முதல் பாகம் 12 பகுதிகளைக் கொண்டது. ஒரு பகுதி கதையாகவும், அடுத்த பகுதி டைரிக் குறிப்பாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாகம் 12 பகுதிகளைக் கொண்டது. இதில் 10ஆவது பகுதி மட்டும் டைரிக் குறிப்பு.
 நாவலின் நாயகன் குமரன். இவரது எளிய- சிறிய பெயரைக் கண்டு பொறாமை கொள்ளும் மனநல மருத்துவரின் பெயர் "அறிவுடைநம்பி கலியபெருமாள் பூரணசந்திரன்'!
 இருவரின் குடும்பம், இவர்களுக்கிடையேயான உரையாடல், ஏறி- இறங்கும் மன ஓட்டங்கள், திருமணம் கடந்த உறவு, அவற்றையொட்டிய கனவுகள், பாதிப்புகள்- இவைதான் "சிலிங்' நாவல்.
 2020 ஜூன் மாதத்தில் குமரனும், அறிவுடைநம்பி கலியபெருமாள் பூரணச்சந்திரனும் கரோனா தொற்றுக்குள்ளானவர்கள். அதன் பிறகு ஓராண்டு கழித்து 2021 ஜூலையில் தொடங்குகிறது முதல் பாகம். 2021 டிசம்பரில் தொடங்குகிறது இரண்டாம் பாகம். கடைசியில் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொள்கிறார் மனநல மருத்துவர்.
 எளிய, அதேநேரத்தில் படு "திரில்'லான எழுத்து நடை. சொற்களாலும், வாக்கியங்களாலும் விளையாடியிருக்கிறார் கணேசகுமாரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com