செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை - திருமுருக கிருபானந்த வாரியார் ; பக். 292; ரூ. 86 ; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை - 2; ) 044 - 2845 7666.
செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை - திருமுருக கிருபானந்த வாரியார் ; பக். 292; ரூ. 86 ; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை - 2; ) 044 - 2845 7666.
 சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்காக கிருபானந்த வாரியார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இந்நூல். "இலக்கிய இன்பம்', "முத்தமிழ்', "திருப்புகழ் இன்பம்', "தேவார இன்பம்', "பெரிய புராணச் சிறப்பு', "கந்தபுராண நுண்பொருள்', "ராமாயண சாரம்', "சைவ சித்தாந்தம்' ஆகிய எட்டு தலைப்புகளில் அவர் ஆற்றிய உரைகளைப் படிக்கும்போது, வாரியாரின் பேச்சை நேரில் கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இடையிடையே அவர் கூறும் உதாரணங்களும், குட்டிக் கதைகளும் நகைச்சுவையுடன், நற்சிந்தனைகளையும் அளிக்கின்றன.
 முருகப்பெருமான் அகத்தியருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். அவர் "அகத்தியம்' என்று ஓர் இலக்கணம் செய்தார். அதில் சில பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. கடல்கோள்களால் அநேக பாடல்கள் அழிந்து விட்டன. அந்த அகத்தியம் சிதைந்த பிற்பாடு அகத்தியருக்கு 12 சீடர்கள் அமைந்தனர். அவர்களில் ஒருவர்தான் தொல்காப்பியர்.
 பெருமாளை எதிர்த்தான், இரணியன் வாழ்ந்தான்; பிரகலாதனை எதிர்த்தான், வீழ்ந்தான். ஆண்டவனை விட அடியார்களுக்குப் பெருமை அதிகம். ஆண்டவன் புகழ் நம்முடைய சொல்லுக்கு அடங்கும்; தொண்டர்கள் புகழ் அடங்காது.
 சிவனுக்கு பூஜைசெய்ய மலர் பறிக்கச் சென்ற தாயுமான சுவாமிகள், ""தோட்டத்தில் மலரே இல்லை'' என்று திரும்பி வருகிறார். ஆனால், தோட்டம் முழுவதும் மலர்கள் இருந்தன. பறிக்கவில்லையா என்று கேட்டதற்கு, "அவையெல்லாம் என் கண்ணுக்கு சிவமாகத் தோன்றுகின்றன. சிவத்தைக் கிள்ளி சிவத்தின் மேல் போடலாமா?'' என்கிறார் தாயுமான சுவாமிகள். அவர் எல்லாப் பொருளையும் சிவமாகவே பார்க்கிறார். இப்படி பல சுவையான சம்பவங்கள் இந்நூலில் நிறைந்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com