சொன்னதும் சொல்லாததும்

சொன்னதும் சொல்லாததும் - வானவில் கே.ரவி; பக்.128; ரூ.140; நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை- 600 092. 
சொன்னதும் சொல்லாததும்

சொன்னதும் சொல்லாததும் - வானவில் கே.ரவி; பக்.128; ரூ.140; நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை- 600 092.
நூலாசிரியர் முகநூலில் எழுதிய 12 கட்டுரைகளும் சிற்றிதழ் ஒன்றில் எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
கவிதையை வாசிக்கும் ஒருவர் அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைவிட, கவிதையை எப்படி உணர்ந்து கொள்வது? என்பதை இந்நூலின் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்.
கவிதைகள் நமக்குள் ஏற்படுத்தும் மன உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதைகளைக் காண்கிறது இந்நூல்.
"தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்க' என்று தொடங்கும் கம்பனின் பாடல், "காற்று வெளியிடை கண்ணம்மா' என்ற பாரதியாரின் பாடல், "அருவிகள் வயிரத் தொங்கல், அடர்கொடி பச்சைப்பட்டே' என்று தொடங்கும் பாரதிதாசனின் கவிதை வரிகள் என நூல் முழுக்க எடுத்துக்காட்டாகக் கூறப்படும் பல கவிதை வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
"தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று சிவனைத் தென்னாட்டுக்குள் மட்டும் எப்படி அடக்க முடியும்? என்ற கேள்வி நூலாசிரியருக்கு எழ, அதற்கு அவர் கண்டுபிடித்த விடை, சிதம்பரத்தில் (தென்புலியூரில்) ஆடுகின்ற சிவனை தென்னாடுடைய சிவன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதே. கம்பர் முதல் கண்ணதாசன் வரை உள்ள தமிழ் கவிதை உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com