தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு - வீ.கோபால்; பக்.448; ரூ.350; அபி பிரியா பதிப்பகம், 1- 349-3, அல்லி தெரு, வ.உ.சி.நகர், யாதவர் ஆண்கள் கல்லூரி எதிரில், திருப்பாலை, மதுரை-625014. 
தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு - வீ.கோபால்; பக்.448; ரூ.350; அபி பிரியா பதிப்பகம், 1- 349-3, அல்லி தெரு, வ.உ.சி.நகர், யாதவர் ஆண்கள் கல்லூரி எதிரில், திருப்பாலை, மதுரை-625014.
 தமிழ் இதழியல் குறித்து எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கெனவே உள்ள நூல்களிலிருந்து தமிழ் இதழியல் வரலாறு எனும் நூலை எந்த வகையில் நூலாசிரியர் வேறுபடுத்தி உருவாக்கியுள்ளார் என்பதை நூலின் உட்கருத்தை படித்தால் புரிந்து கொள்ள முடியும்.
 கடந்த கி.பி.1800களில் தொடங்கிய இதழியல் பயணத்தை சம காலம் வரையில் தொகுத்தளிப்பதுடன், எந்த எந்த காலகட்டத்தில் எப்படிப்பட்ட இதழ்கள் தோன்றின என்ற வரலாற்றுப் பின்புலத்தை சுருக்கமாக விளக்கியிருப்பது நூலின் சிறப்புகளில் முக்கியமானது.
 இதழ்கள் என்பவை காலக்கண்ணாடி போல சமூகத்தை நிகழ் மற்றும் எதிர்காலச் சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்பதை நூலாசிரியர் ஒவ்வொரு பகுதியிலும் ஆதாரங்களோடு விளக்கியுள்ளது பாராட்டுக்குரியது.
 ஆன்மிகம் முதல் அரசியல் வரை எந்தெந்தத்துறையில் என்ன என்ன இதழ்கள் முதன்மையாக வெளிவந்துள்ளன; அவற்றின் பணி எத்தகையதாக இருந்துள்ளது என ஆய்வு நோக்கிலும் தகவல்களைத் தந்துள்ளார் நூலாசிரியர்.
 கிராம முன்னேற்றத்துக்கான இதழ்கள், வேளாண்மையை மையமாக்கிய இதழ்கள் என வரிசைப்படுத்தும் நூலாசிரியர் தமிழின் முதல் அரசியல் இதழாக சுதேசமித்திரனைக் குறிப்பிட்டு அதில் பாரதி பணிபுரிந்ததையும் சாமானிய மக்களுக்கான தமிழ் இதழாக அது விளங்கியதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
 இதழ்களின் வரலாறாக மட்டுமின்றி அவற்றின் நிர்வாக முறைகள், இதழ்கள் வெளியிடப்பட்ட பகுதிகள் குறித்த கருத்து என இதழியல் வரலாற்றை முழுமையாக ஒரே நூலில் கொண்டு வர நூலாசிரியர்முயற்சித்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com