பாமர இலக்கியம்

பாமர இலக்கியம்

பாமர இலக்கியம் - கஸ்தூரி ராஜா;  பக். 934; ரூ.500; விஜயலட்சுமி பதிப்பகம், சென்னை- 17; 044-28155055

கல்வி, வேலை, வாழ்வாதாரத்துக்காக நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் படையெடுத்தாலும் பூர்விகக் கிராமமும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையும் யாராலும் மறக்க இயலாது. சொந்த மண்ணின் மீதான ஏக்கமும் பிடிமானமும் இருக்கும் என்பதை வட்டார வழக்கில் 
இந்நூல் விவரிக்கிறது.

உழவு, கால்நடை, காதல், பூப்பெய்தல், திருமணம், சண்டைச் சச்சரவுகள், வழிபாடு, பண்டிகை, விருந்து, திருவிழா, புவியியல், நகர்ப்புற இயந்திர வாழ்க்கை உள்ளிட்டவற்றை மையப்படுத்திய காத்திரமான கருத்துகளை முன்வைக்கிறது. பாமர மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்களுக்கே உரிய பகடி, எள்ளல் உரையாடலுடன் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளது.

மாமென், மாப்ள, மச்சியான், சித்தப்பு, பெரியப்பு, மதினி,  சின்னாத்தா, பெரியத்தா என ஜாதிவிட்டு ஜாதியில் உறவுகளை, நட்புகளை உருவாக்கி வளர்ப்பது விவசாய நிலம்தான். நவீன நாகரிகம் வளர்ந்த பிறகும் கிராமங்களில் உறவுகள் சிதறிப்போகாமல் இருப்பதற்கு அவர்களின் பேச்சுப்பழக்கமே காரணம்.

வெளஞ்சதெல்லாந் தீனி, ஓடுனதெல்லாம் தண்ணி, அடிக்கிற காத்தெல்லாம் மூச்சு அதுதான் ஆரோக்கியத்தின் ரகசியம். தின்றதெல்லாம் காட்டுத்தீனி, விளையாட்டெல்லாம் சடுகுடு-சல்லிகட்டு, ஆயுதமெல்லாம் அருவா-கத்தி, பொழங்குறதெல்லாம் மம்பட்டி-கோடாலி என இரும்புடன் உறவாடி உறவாடி தமிழன் வலிமையாக இருந்தான்.

தியாகி தொரச்சாமி மனநிலை பாதிப்புக்கு ஆளாவதும், அவருடைய மனைவி சீனித்தாயின் இறுதிச் சடங்கில் தொரச்சாமியின் நடவடிக்கைகளும் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

வெள்ளந்தி மனிதர்களின் உணர்வுகளை எழுத்தில் வடித்துள்ளது 'பாமர இலக்கியம்'. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com