அறிவியலால் உயர்வோம்

அறிவியலால் உயர்வோம் (தினமணி நடுப்பக்கக்கட்டுரைத் தொகுப்பு-11) - நெல்லை சு.முத்து; பக்.120; ரூ.90; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; 044 - 2434 2810.
அறிவியலால் உயர்வோம்

அறிவியலால் உயர்வோம் (தினமணி நடுப்பக்கக்கட்டுரைத் தொகுப்பு-11) - நெல்லை சு.முத்து; பக்.120; ரூ.90; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; 044 - 2434 2810.
 தினமணி நடுப்பக்கத்தில் வெளிவந்த 12 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
 அறிவியலாளரான நூலாசிரியர் எழுதியஇக்கட்டுரைகள் அனைத்தும் அறிவியல் தொடர்பானவை அல்ல. தேர்தல் தொடர்பான "எல்லாக் கட்சிக்கும் பொதுவில் வைப்போம்' கட்டுரை, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சிகளைப் பற்றிய "சுதந்திர இந்தியாவும் பெருநிறுவன இந்தியாவும்' கட்டுரை ஆகியவை வித்தியாசமானவை. ஆனால் எப்பொருள் குறித்து நூலாசிரியர் எழுதும்போது அவருடைய அறிவியல் கண்ணோட்டம் அதில் பளிச்சிடவே செய்கிறது.
 மிகச் சிறந்த படைப்பாளியான ஆ.மாதவனின் படைப்புகள் குறித்த கட்டுரை, மருத்துவத்துறையில் சிறந்து விளங்கிய சந்திரமுகி பாசு, காதம்பினி, ஆனந்தி கோபால் கோஷி, தமிழகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய "அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்கள்' கட்டுரை ஆகியவை குறிப்பிடத்தக்க சிறந்த கட்டுரைகள்.
 கட்டுரைகளில் நூலாசிரியரின் கருத்துகள் தெளிவாக, எளிமையாகக் கூறப்பட்டிருக்கின்றன. "அறிவியலில் பாடம் அல்ல, படிப்பினை தான் முக்கியம். வாழ்வில் வாய் உபதேசம் அல்ல, செயல்கள்தான் முக்கியம்' என்ற கருத்து, "வோட்டுக்கு நோட்டு
 வாங்கும் வாக்காளரும், ஜெயித்த பின், நோட்டுக்கு சீட்டு மாறும் வேட்பாளரும் அற்ற ஜனநாயகத்தை வலியுறுத்துவோம்' என்ற கருத்து, " நேற்று அடிமை இந்தியா, இன்று சுதந்திர இந்தியா, நாளை கார்ப்பரேட் இந்தியா என்ற சித்தாந்தமும் முளைத்துவிட்டது' ஆகிய கருத்துகளை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.
 கரோனா தொற்று குறித்த கட்டுரை, உணவைப்பற்றிய கட்டுரை, ஆற்றல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை என நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் நூலாசிரியரின் அறிவியல் கண்ணோட்டத்தை விளக்குபவையாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com