சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள்

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள் - வி.டில்லிபாபு; பக்.88; ரூ.120; திசையெட்டு, 85, மல்லிகைப்பூ காலனி, வியாசர்பாடி, சென்னை- 600039.
சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள்

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள் - வி.டில்லிபாபு; பக்.88; ரூ.120; திசையெட்டு, 85, மல்லிகைப்பூ காலனி, வியாசர்பாடி, சென்னை- 600039.
 சுதந்திர இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமகன்களால் முன்னெடுக்கப்பட்டசில முக்கிய அறிவியல் தொழில்நுட்பப் பொறியியல் புரட்சிகளைப் பற்றி பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல். வேளாண் துறை, பாதுகாப்புத்துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் நமது நாட்டின் பெருமிதம் கொள்ளும் சாதனைகளையும், சாதனையாளர்களையும் ஒருசேரக் கொணர்ந்துள்ள இந்த நூல், இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும். அறிவியல்துறையை சாராதவர்களும், பொதுமக்களும் நமது நாட்டின் தொழில்நுட்பச் சாதனைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
 விளக்கில்லாத் தொழிற்சாலை, நூறு கோடி லிட்டர் யோசனை, நகரங்களை மீட்கும் மெட்ரோ, ஏவுகணைப் புரட்சி, வந்தேன்டா பால்காரன், உணவதிகாரம் என ஒவ்வோர் அத்தியாயங்களையும் வாசிக்கும்போதும் தொழில்நுட்பத்தின் சிறப்புகளையும், தன்னம்பிக்கையின் உச்சத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
 குறிப்பாக மெட்ரோ ரயில் இருப்புப் பாதை அமைக்கும் போது சந்தித்த சவால்களைப் படிக்கும்போது வியப்பு மேலிடுகிறது.
 நிலத்தில் அமையும் இருப்புப் பாதைக்கே பெரும் முதலீடு, இயந்திரங்கள் என பலவற்றிலும் சிக்கல் உள்ள நிலையில் நிலத்தடியில் இருப்புப் பாதை அமைப்பது மேலும் சிக்கலானது. இது போன்ற பெரும் திட்டங்கள் எத்தகைய சிக்கல்களைத் தாண்டி தொழில்நுட்பங்களின் உதவியோடு நிறைவேற்றப்படுகின்றன என்பது படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. பொறியியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல், ஓர் ஆச்சரியம் ஊட்டும் பரிசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com