பணம் தரும் மந்திரம்

பணம் தரும் மந்திரம் - உங்களை செல்வந்தராக மாற்றும் எளிய வழிகாட்டி- எஸ்.கே.முருகன்; பக்.176; ரூ.125; விகடன் பிரசுரம், சென்னை-2; 044 - 4263 4283.
பணம் தரும் மந்திரம்

பணம் தரும் மந்திரம் - உங்களை செல்வந்தராக மாற்றும் எளிய வழிகாட்டி- எஸ்.கே.முருகன்; பக்.176; ரூ.125; விகடன் பிரசுரம், சென்னை-2; 044 - 4263 4283.
 பணம் சம்பாதிப்பது என்பது மனித வாழ்க்கையின் ஓர் அடிப்படைத் தேவையாகிவிட்டது. பணமின்றி ஓரணுவும் அசையாது. ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் எவை? பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும்
 செய்துவிடலாமா?என்பன போன்ற கேள்விகளுக்கு மிக எளியமுறையில் பதில் சொல்கிறது இந்நூல்.
 பணம் சம்பாதித்து வாழ்வில் உயர்நிலையில் உள்ள திருபாய் அம்பானி, பங்குச் சந்தையில் உச்சம் தொட்ட வாரன் எட்வர்ட் பஃபெட், தன்னுடைய திட்டமிட்ட உழைப்பால் உயர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தில் உயர்பதவி வகித்த சந்திரசேகரன், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த இந்திரா நூயி, இரண்டு கால்களும் இல்லாத நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மார்க் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை நிகழ்வுகள் கற்றுத் தந்த பாடங்களை இந்நூல் தொகுத்து வழங்குகிறது.
 தன்னை அவமானப்படுத்திய நந்த வம்சத்து அரசனை சபதம் செய்து சாணக்கியர் வீழ்த்தியது, அவசர நிலை அறிவித்ததை தவறு என உணர்ந்த இந்திராகாந்தி, அடுத்து வந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது, பெரிய அளவுக்குக் கல்வித் தகுதி இல்லாத ஜி.டி.நாயுடு அற்புதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது என பல சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி, சுஜாதா, பெஞ்சமின் பிராங்களின், ஹெலன் கெல்லர், இளையராஜா என சாதனையாளர்களின் வரலாறு தொடர்கிறது.
 ஒவ்வோர் அத்தியாயம் தொடங்கும்போதும் ஒரு குட்டிக் கதையுடன் தொடங்குவது வாசிப்பை சுவையாக்குகிறது. அத்தியாயத்தின் இறுதியில் அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட சாதனையாளரின் கருத்துகளைத் தொகுத்து தந்திருப்பது நூலின் கட்டமைப்பை செறிவாக்குகிறது.
 எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, எப்படி பணம் சம்பாதிக்கக் கூடாது என்பதை சத்யம் நிறுவனத்தின் ராமலிங்க ராஜுவின் வாழ்க்கையில் இருந்து எடுத்துக்காட்டி நூல் விளக்குகிறது. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகளைத் தூண்டும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com