நாகராஜா கோவில்

நாகராஜா கோவில்- சிவ.விவேகானந்தன்; பக். 306; ரூ.300; காவ்யா பதிப்பகம், சென்னை-14; 044-2372 6882.
நாகராஜா கோவில்

நாகராஜா கோவில்- சிவ.விவேகானந்தன்; பக். 306; ரூ.300; காவ்யா பதிப்பகம், சென்னை-14; 044-2372 6882.
 கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் என்ற ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்த நாகராஜா கோயில் குறித்த ஆய்வு நூல் இது. கோயில் அமைப்பு, கட்டடக் கலை, சிற்பக் கலை, வழிபாடு, திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து அரிய தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
 ஒரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்து, இப்போது சமண, சைவ, வைணவக் கோயிலாக நாகராஜா கோயில் மாறிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் அமைப்பு மற்றும் கட்டடக் கலை குறித்து கூறியிருப்பது இக்கோயிலுக்கு இதுவரை செல்லாதவர்கள் நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பொருத்தமான புகைப்படங்கள் கட்டுரைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
 நாகராஜா கோயிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன என்றாலும் நாகர் வழிபாட்டுக்குச் சிறந்த நாளாக கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பக்தர்கள் கொண்டு வரும் பாலைக் கொண்டு பால் அபிஷேகம் நீண்ட நேரம் நடைபெறும். அத்தகைய பால் அபிஷேகத்தின் சிறப்பு சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது.
 இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் திருவிழா சிறப்பானதாகும். அந்த தைத் திருவிழாவின் 10 நாள் நிகழ்வுகள் குறித்தும் தெளிவான விளக்கத்துடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
 நாகராஜா கோயிலில் உள்ள 12 கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சியானது, சிறந்த ஆய்வு நூலுக்குரிய தகுதியை இந்நூலுக்கு வழங்குகிறது. இக்கோயில் மட்டுமன்றி, குமரி மாவட்டத்தில் உள்ள பல கோயில்களில் காணப்படும் சமணத் தடயங்கள் குறித்த அறிமுகத்தையும் இந்நூல் தருகிறது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com