முத்துப்பாடி சனங்களின் கதை

முத்துப்பாடி சனங்களின் கதை - போல்வார் மஹம்மது குன்ஹி;தமிழில் - இறையடியான்; பக். 1152; ரூ. 780; சாகித்திய அகாதெமி, சென்னை - 18; )044 - 2431 1741.
முத்துப்பாடி சனங்களின் கதை

முத்துப்பாடி சனங்களின் கதை - போல்வார் மஹம்மது குன்ஹி;தமிழில் - இறையடியான்; பக். 1152; ரூ. 780; சாகித்திய அகாதெமி, சென்னை - 18;
 )044 - 2431 1741.
 சாகித்திய அகாதெமி விருது பெற்ற "ஸ்வதந்தர ஓட்ட - சுதந்திரத்துக்கான ஓட்டம்' என்ற கன்னட நாவலின் மொழி பெயர்ப்பு.
 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹிந்து - முஸ்லிம்கள் இடையே நடந்த கலவரத்தின் பின்னணியில் தொடங்குகிறது நாவல். தாக்குதலில் வளமான ஒரு ஹிந்துக் குடும்பத்தின் இரு பெண்கள் தப்பிப் பிழைக்க, அகதிகளாக அவர்களை அழைத்துக்கொண்டு விருப்பமின்றி இந்தியாவுக்குள் நுழைகிறான், அவர்களிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன் சாந்த் அலி.
 எப்படியாவது பாகிஸ்தான் திரும்பிவிட வேண்டும் என்ற அவன் எண்ணமும் முயற்சிகளும் நிறைவேறாததுடன், தில்லியில் திரியும் காலத்தில் ஒரு பாவாவின் அறிமுகம் கிடைக்க மசூதிகளை அண்டி உயிர்தரித்து, ஊர் ஊராக நகர்ந்து கர்நாடகத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு - முத்துப்பாடிக்கு - வந்து சேருகிறான்.
 இந்த பிரம்மாண்டமான, 372 பாத்திரங்கள் உலவும், 1146 பக்க நாவல் முடியும்போது முத்துப்பாடியிலேயே வேரூன்றிய சாந்த் அலி முதியவராகிவிடுகிறார். பிரிவினைக் கலவரத்துடன் தொடங்கும் நாவலின் போக்கில், சாந்த் அலி சந்தித்த ஒரு நபரால், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்படுகிறார். நாவலுடன் சம்பவங்களாக பாபர் மசூதி தகர்க்கப்படுவதும் வன்முறைகளும் பதிவாகின்றன.
 வாழ்நாள் முழுவதும் லாகூரும் முத்துப்பாடியுமாக சாந்த் அலியின் நினைவுகள் முன்னும் பின்னுமாக நகர்வதும் மிக இயல்பாக மத நல்லிணக்கத்தைப் பேசுவதும் நாவலின் சிறப்பு.
 நாவலின் ஆசிரியர் போல்வார் மஹம்மது குன்ஹியின் உணர்வோட்டத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் இறையடியான். மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு.
 இத்தனை பெரிய நாவலாக இருந்தாலும் கூட வாசிக்க சலிப்பில்லாமல் செல்வது குறிப்பிடத் தக்கது. தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறப்பான நாவல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com