அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு - ஜெகாதா; பக். 216; ரூ.200;  நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044-2834 3385.

தமிழகத்தில் உள்ள அணைகளின் முழு விவரத்தோடு, இந்தியாவில் உள்ள அணைகள், நீர்ப் பங்கீடுகளால் மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் பிரச்னைகள் என்று 26 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரவருணி, நேரடியாகக் கடலில் கலக்காத ஒரே நதியான வைகை, பாலாறு என்று ஒவ்வொரு நதியைப் பற்றியும் ருசிகரமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நதிநீர்ப் பங்கீடு குறித்து 1950-இல் உலக நாடுகள் ஃபின்லாந்தில் கூடி விவாதித்து, பல கொள்கைகளை வரையறுத்தன. இந்தக் கொள்கைகள்தான் உலகம் முழுவதும் நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்தில் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், காவிரி நீர், முல்லைப் பெரியாறு மட்டுமன்றி பிற நதிகளின் தண்ணீர் உரிமை குறித்து மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் பிரச்னைகள் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்தபோது சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் நீர்ப்பாசனத் துறையையும் கூடுதலாக கவனித்தது, ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது இயற்றப்பட்ட நதிவாரியச் சட்டம் இன்றுவரை அமல்படுத்தப்படாமல் உள்ளது போன்றவை இன்றைய தலைமுறை அறிய வேண்டியவை.

இவைதவிர, நதிகள் உருவான விதமும், அவற்றோடு இணைந்த ஆன்மிக வரலாற்றையும்கூட தெள்ளத் தெளிவாக நூலாசிரியர் விளக்கியுள்ளார். "நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நீரின் முக்கியத்துவத்தை முழுமையாக விளக்கும் இந்நூல், படித்து பாதுகாக்க வேண்டிய ஒன்று.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com